December 26, 2016
போயஸ் 2-வது முறை ரெய்டில் சிக்கியவை என்ன? 30 கி. தங்கம், 400 வளையல், 500கி. வெள்ளி, போயஸ் முதல் ரெய்டில் சிக்கியவைகள் இவை!!
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பங்களாவுக்குள் ஐடி அதிகாரிகள் 1996-ம் ஆண்டுக்கு பின்னர் 2-வது முறையாக நுழைந்து அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
மறைந்த ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பங்களாவுக்குள் வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்திருப்பது 2-வது முறையாகும். ஜெயலலிதா உயிருடன் இருந்த போது சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்காக 1996-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் முதல் முறையாக போயஸ் கார்டனுக்குள் நுழைந்தனர்.
10,000 சேலைகள் ஜெயலலிதா வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன. 100 உயர் ரக வாட்சுகள், 30 கிலோ தங்கம், 400 ஜோடி வளையல்கள், 500 கிலோ வெள்ளி, 10,000 சேலைகள், 250 ஜோடிகள் இறக்குமதி செய்யப்பட்ட செருப்புகள் அப்போது கைப்பற்றப்பட்டன. இந்த ரெய்டுக்கு தலைமை வகித்தவர் நல்லம நாயுடு. அதன்பின்னர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் 2-வது முறையாக வருமான வரித்துறை அதிகாரிகள் போயஸ் கார்டனுக்குள் நுழைந்துள்ளனர். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது போயஸ் கார்டனில் தலைமை செயலர் ராமமோகன் ராவுக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதா பார்க்க வேண்டிய கோப்புகள் ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்தன. இந்த 2 அறைகளை சோதனையிடத்தான் 2-வது முறையாக போயஸ் கார்டனுக்குள் வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போயஸ் 2-வது முறை ரெய்டில் சிக்கியவை என்ன? 30 கி. தங்கம், 400 வளையல், 500கி. வெள்ளி, போயஸ் முதல் ரெய்டில் சிக்கியவைகள் இவை!!
Reviewed by Admin
on
December 26, 2016
Rating: 5
Reviewed by Admin
on
December 26, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.