கலைஞர் இரண்டாம் முறையாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு கொஞ்சம் சீரியசாகவே இருந்து வருகிறார். மூக்கு வழியாக திரவ உணவு செலுத்தப் பட்டு வந்தது.
தொண்டை வழியாக மூச்சு விடுவதற்கும் துளை போட்டு ஆக்ஸிஜன் செலுத்தியதும் அனைவரும் அறிந்ததே. தற்போது அவர் குணமடைந்து இன்று வீட்டுக்கு திரும்ப உள்ளதாகவும் கனிமொழி கூறியுள்ளார்.
தெரியாத விசயம் ஒன்றை அந்த வார இதழ் கூறியுள்ளது. அதாவது கலைஞர் இருக்கும் அறைக்கு அருகிலேயே மூன்று அறைகள் எடுத்து தங்கி இருக்கிறார்கள், அவர்கள் குடும்பத்தினர்.
அழகிரி குடும்பம் ஒரு அறை,கனிமொழி ராசாத்தியம்மாள் ஒரு அறை, தளபதிக்கு தனி அறை. இங்கு அழகிரி தளபதியிடம் பேசுவதில்லை.
அழகிரி தளபதி குடும்பத்தாரிடம் பேசுவதில்லை. கனிமொழி அழகிரி, மூத்த மகள் செல்வி மட்டும் தனியாக மீட்டிங் போட்டு யாருக்கு என்ன பிரிப்பது, திமுக அறக்கட்டளையில் யார் யாருக்கு இடம் வேண்டும் என்பது பற்றி பேசுகிறார்களாம்.
பேசிய விஷயங்களை தளபதியிடம் சொல்கிறார் செல்வி. தளபதியோ சொத்து பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், கட்சியில் யாருக்கும் இடம் இல்லை.
குறிப்பாக அழகிரிக்கு தொண்டர் பதவி கூட கொடுக்க முடியாது. அதே போல் அறக்கட்டளை பற்றி யாரும் வாய் திறக்க கூடாது. அது கட்சிக்கு உட்பட்ட சொத்து என்று ஒரே போடாக போடுகிறார்.
இதற்கு தான் வாக்குவாதங்களும், வாய்ச் சண்டைகளும் நடந்து வருகிறது என்கிறார்கள். ராசாத்தியம்மாள் பரிதாபமாகப் படுத்திருக்கும் கலைஞர் முன் புலம்பி அழ, அவரோ கண்கள் மட்டும் கலங்குகிறார் அவரால் பேச இயலவில்லை.
சில சமயங்களில் செல்வியைக் கூட அடையாளம் தெரியவில்லை என்கிறார்கள்.தொண்ணுறு வயதைக் கடந்து முடியாத நிலையில் படுத்திருக்கும் கலைஞருக்கு இவ்வளவு மனக் கஷ்டம் கூடாது தான்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.