December 27, 2016
பெண் போலீஸ் மீது ஆசிட் வீச்சு: பார்வை இழக்கும் அபாயம் – 2 பேரை பிடித்து விசாரணை
திருப்பத்தூர் -பெண் போலீஸ் மீது பைக்கில் வந்த 2 பேர் ஆசிட் வீசினர். அவர் வலது கண் பார்வை இழக்கும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக 2 பேரை பி்டித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குரிசிலாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் லாவண்யா(27), பெண் போலீஸ். இவரது கணவர் சுரேஷ், டிரைவர்.
இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். லாவண்யா திருப்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிகிறார். இவர்கள் குடும்பத்துடன் திருப்பத்தூர் என்ஜிஓ நகரில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்த லாவண்யா நேற்று இரவு 9.30 மணியளவில் பணி முடிந்து போலீஸ் குடியிருப்பு அருகே பீரான் லைனில் உள்ள அவரது அண்ணன் சிலம்பரசன் வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.
asitஅப்போது பைக்கில் வந்த 2 மர்மநபர்கள் திடீரென லாவண்யாவை வழிமறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த லாவண்யா சுதாரிப்பதற்குள் பைக்கில் வந்தவர்களில் ஒருவன் திடீரென மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த ஆசிட்டை எடுத்து லாவண்யா முகத்தில் வீசினான். இதனால் லாவண்யாவின் முகம் மற்றும் வலது கை கருகியது.
வலியால் அலறித்துடித்த அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் பைக்கில் தப்பிச்சென்றனர்.
உடனடியாக படுகாயமடைந்த லாவண்யாவை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். லாவண்யாவுக்கு தற்போது வலதுபக்க பார்வை இழக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த டிஎஸ்பி பன்னீர்செல்வம் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினார்.
மேலும் அவரது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசிட்வீசி சென்றவர்களுக்கும் லாவண்யாவுக்கும் இடையே ஏதாவது முன்விரோத தகராறு உள்ளதா? கணவன் மனைவி பிரச்னையா?
அல்லது கொடுக்கல் வாங்கல் பிரச்னையா என்பது குறித்து லாவண்யாவுக்கு சுயநினைவு திரும்பியதும் அவர் கொடுக்கும் தகவல்களை வைத்துதான் ஆசிட் வீசி சென்றவர்கள் யார் என்பது கண்டுபிடிக்க முடியும் என போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இதுதொடர்பாக 2 பேரை பிடித்தபோலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
பெண் போலீஸ் மீது ஆசிட் வீச்சு: பார்வை இழக்கும் அபாயம் – 2 பேரை பிடித்து விசாரணை
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 27, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 27, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.