December 14, 2016
சேகர் ரெட்டிக்கு அச்சகத்தில் இருந்து நேரடியாக வந்த ரூ.2 ஆயிரம் நோட்டுகள்
சென்னை தொழில் அதிபர் சேகர் ரெட்டியின் சென்னை மற்றும் ஆந்திராவில் உள்ள வீடுகளில் வருமான வரி துறையினர் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அவர் கோடி கோடியாக பணமும், தங்க கட்டிகளும் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரிடம் இருந்து 161 கோடி ரூபாய் ரொக்க பணம், 179 கிலோ தங்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இந்த ரூ.161 கோடியில் 34 கோடி ரூபாய் புதிய 2 ஆயிரம் நோட்டுகள் ஆகும்.
உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு ஒழித்ததை தொடர்ந்து 2 ஆயிரம் ரூபாய் புதிய நோட்டுகள் வெளியிடப்பட்டன. ஆனாலும், மக்கள் தேவைக்கு தகுந்தார் போல் அதிக அளவில் பணத்தை அச்சிட்டு வெளியிடவில்லை.
எனவே, பணம் கிடைக்காமல் நாடு முழுவதும் மக்கள் திண்டாடி வருகிறார்கள். ஏ.டி.எம்.களில் அதிகபட்சமாக 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்ற நிலை உள்ளது. ஆனாலும், பண தட்டுப்பாட்டால் பெரும்பாலான ஏ.டி.எம்.கள் மூடியே கிடக்கின்றன.
இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் சேகர் ரெட்டிக்கு மட்டும் 2 ஆயிரம் புதிய நோட்டுகள் 34 கோடி ரூபாய் அளவுக்கு கிடைத்தது எப்படி? என்பது மர்மமாக இருந்தது.
இது தொடர்பாக வருமானவரி துறையினர், அமலாக்க பிரிவினர் மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆகியோர் இப்போது விசாரணையை தொடங்கி உள்ளனர். அதில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சாகும் அச்சகத்தில் இருந்தே சேகர் ரெட்டிக்கு நேரடியாக பணம் வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அச்சகத்தில் அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகள் வழக்கமாக ரிசர்வ் வங்கியின் மைய அலுவலகத்துக்கு அனுப்பப்படும். பின்னர் அந்த பணம் ஒவ்வொரு வங்கிக்கும் பிரித்து கொடுக்கப்படும்.
ஆனால், உயர்மதிப்பு நோட்டு செல்லாது என அறிவித்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டை புழக்கத்தில் விட்டதால் அந்த பணம் வங்கிகளுக்கு சென்றடைய கால தாமதமாகி விடும் என்பதற்காக அச்சகத்தில் இருந்தே சில வங்கிகளுக்கு நேரடியாக அனுப்பப்பட்டன.
இதன்படி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள ஸ்டேட் வங்கி சிறப்பு பண நிர்வாக கிளைக்கு (ஸ்கேப்) அனுப்பப்பட்டது. ஆந்திராவில் இந்த கிளை விசாகபட்டினத்திலும், தெலுங்கானாவில் இந்த கிளை குன்பவுண்டரியிலும் உள்ளன.
இந்த கிளைகளுக்கு வந்த பணத்தை அப்படியே திசை மாற்றி சேகர் ரெட்டிக்கு அனுப்பி உள்ளனர். இப்படித்தான் அவருக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கத்தை, கத்தையாக கிடைத்துள்ளன.
இதில், ஸ்டேட் வங்கியின் மூத்த அதிகாரிகள் 10 பேர் சம்பந்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த வங்கிகளுக்கு அனுப்பப்பட்ட ரூபாய் நோட்டின் சீரியல் எண்ணையும் சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப்பட்ட ரூபாய் நோட்டின் சீரியல் எண்ணையும் ஒப்பிட்டு பார்த்து விசாரணை நடத்துகிறார்கள்.
சேகர் ரெட்டிக்கு மட்டுமல்லாமல், மேலும் பல கருப்பு பண முதலைகளுக்கும் இங்கிருந்து பணம் சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே, அதுபற்றியும் விசாரணை நடத்தப்படுகிறது. இதற்கு உடந்தையாக இருந்த 10 அதிகாரிகளும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
f
சேகர் ரெட்டிக்கு அச்சகத்தில் இருந்து நேரடியாக வந்த ரூ.2 ஆயிரம் நோட்டுகள்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 14, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 14, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.