December 26, 2016
திடுக்.. திருப்பம்…?! ஜனவரியில் ஸ்டாலின் முதல்வர்..?! 29 தேதிக்கு பின் சசி எடுக்கப்போகும் முடிவு..?!
உண்மையாகவே வரும் 29 ஆம் தேதி என்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள் ஆகிவிட்டது. சசிகலாவைப் பொறுத்தவரை அந்த நாள் தான் முப்பது வருட தவத்தின் பலனை அறுவடை செய்யும் நாள்.
என்ன மாயம் வேண்டுமானாலும் நிகழ்த்துங்கள். நான் ஜெயலலிதா அமர்ந்த பொதுச்செயலாளர் பதவியில் அமர வேண்டும்.
அமர்ந்தே ஆகவேண்டும். இந்த ஒரு வார்த்தைக்கு கட்டுப்பட்டு தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் களப்பணி ஆற்றப்பட்டு வருகிறது.
ஆனால், அதற்கு தடையாக முதல்வர் பன்னீர் இருக்கிறார். இன்னொரு புறம் தீபா..மறு புறம் சசிகலா புஷ்பா, அதைத்தாண்டி டெல்லியின் மூவ்.
இப்படி மும்முனை தாக்குதலை சசிகலா தாக்குப் பிடித்து பொதுச்செயலாளர் பதவியில் அமர வேண்டும். இதெல்லாம் சாதாரணமான தடையாக சசிகலா நினைக்கவில்லை.
ரெய்டுகள் நடந்த பின் முதல்வரின் செல்வாக்கு தறிகெட்டு உயர்ந்துள்ளது. மக்கள் பன்னீர்தான் பொதுச்செயலாளர் என்று மனதளவில் முடிவெடுத்துள்ளனர்.
தீபாவும் ரேசில் இருக்கிறார். இப்படி பல தரப்பிலும் போட்டிகள் கிளம்ப, அரசியல் நோக்கர்கள் வேறு ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறார்கள்.
சசிகலா ஒரு வேளை பொதுச்செயலாளர் பதவியில் உட்கார முடியாத சூழல் வந்தால், தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை ஸ்டாலினுக்கு தாரை வார்த்து விடுவார் என்கிறது ஒரு தரப்பு.
முதல்வர் பதவியை பன்னீருக்கு தாரை வார்த்துவிட்டு ஒதுங்கி விட மாட்டார் சசிகலா என்கிறார்கள்.
ஜனவரியில் தளபதி ஆட்சியில் அமர்வது 29 ஆம் தேதியின் கையில் இருக்கிறது..!
அப்போ, ஜனவரியில் ஸ்டாலின் ஆட்சியா..? அரசியல் களத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்..!? அந்த மாயம் நடப்பதற்கு 29ம் தேதி வரை காத்திருப்போம்..??
பார்க்கலாம்.!
திடுக்.. திருப்பம்…?! ஜனவரியில் ஸ்டாலின் முதல்வர்..?! 29 தேதிக்கு பின் சசி எடுக்கப்போகும் முடிவு..?!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 26, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 26, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.