December 23, 2016
டிச.29-ல் அதிமுக பொதுக்குழு கூடுகிறது- சசிகலா பொதுச்செயலராக தேர்வு?
அதிமுக பொதுக்குழு வரும் 29-ந் தேதி கூடுகிறது என தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்பொதுக் குழு கூட்டத்தில் அதிமுகவின் பொதுச் செயலராக சசிகலா நடராஜன் தேர்வு செய்யப்படக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். ஜெயலலிதா வகித்து வந்த அதிமுக பொதுச்செயலர் பதவி யாருக்கு என்ற கேள்வி எழுந்தது.
முதல்வர் ஓ. பன்னீர்செல்வமே அதிமுக பொதுச்செயலராவார் எனக் கூறப்பட்டது. ஆனால் திடீரென ஜெயலலிதாவின் தோழி சசிகலா தம்மை அதிமுக பொதுச்செயலராக்கும் முயற்சியில் இறங்கினார்.
நாள்தோறும் அதிமுக நிர்வாகிகள், ஜாதி சங்கங்களின் நிர்வாகிகள் பலரும் போயஸ் கார்டனுக்கு வரவழைக்கப்பட்டு சசிகலாவிடம் நீங்களே பொதுச்செயலராகுங்கள் என கோரிக்கை விடுக்கும்படி சொல்ல வைக்கப்படுகின்றனர். இந்த நிலையில் அதிமுகவின் பொதுக்குழு வரும் 29-ந் தேதி சென்னையில் நடைபெறும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த பொதுக்குழுவில் சசிகலா அதிமுகவின் பொதுச்செயலராக தேர்வு செய்யப்படக் கூடும் என தெரிகிறது. அதே நேரத்தில் சசிகலா எதிர்ப்பு அணியினர் அதே நாளில் பகிரங்கமாக போர்க்கொடி தூக்குவர் எனவும் கூறப்படுகிறது.
டிச.29-ல் அதிமுக பொதுக்குழு கூடுகிறது- சசிகலா பொதுச்செயலராக தேர்வு?
Reviewed by மறத்தமிழன்
on
December 23, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
December 23, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.