December 25, 2016
ஆதிக்க சாதி வெறியர்களால் கீழ்வெண்மணிப் படுகொலைகள் நடந்த நாள் இன்று (25.12.1968)
கீழ்வெண்மணிப் படுகொலைகள் என்பது டிசம்பர் -25-1968இல் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழ்வெண்மணி கிராமத்தில், நிலக்கிழார்களால் ( ஆதிக்க சாதி வெறியர்களால்) நடத்தப்பட்ட 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 தலித் வேளாண் கூலித் தொழிலாளர் படுகொலை நிகழ்வாகும்:
தஞ்சை என்றதுமே நமக்கு ராஜ ராஜ சோழனும், விவசாயமும், சிற்ப்பங்களும், தான் நியாபகத்திற்கு வரும் ஆனால் அது மட்டுமே தஞ்சை அல்ல,
தஞ்சை சாதிய கட்டமைப்பின் பிடியில் சிக்கிய ஓர் நரகம் என்பது கீழ்வெண்மணி மட்டுமே நமக்கும் நியாபகப்படுத்திகொண்டே இருக்கிறது.
தஞ்சையில் நிலச்சுவாந்தார்கள் தாழ்த்தபட்ட மக்களை பண்ணையாள் ( அடிமை ) முறை கட்டமைப்பிலே பல நூறு ஆண்டுகளாக வைத்திருந்தார்கள்…
அவர்களின் குழந்தைகள் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டது, வேலை நேரத்தின் போது கடுமையான தண்டனைகள், இரத்தம் வரும் அளவிற்கு சாட்டையால் அடிப்பதும் மாட்டு சாணத்தை தண்ணீரில் கரைத்து குடிக்கும்படி கட்டாயப்படுத்துவதும், மறுத்தால் அடியாட்கள் வைத்து அடிப்பதும் தொடர்ந்துகொண்டே இருந்தது.
இத்தனை வலிகள் அனுபவித்தும் 1968-வரை ஒரு படி நெற்களே கூலியாக வழ்ங்கப்பட்டு வந்தது.
இன்னிலையில் கம்யூனிஸ்ட் மணியம்மையும், சீனிவாசர் அவர்களும் கீழ்வெண்மணியில் பல்வேறும் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் விவசாய தொழிலாளர்களை ஒன்றிணைத்து உழைப்புக்கு ஏற்ற கூலி ( இப்போது வாங்கும் ஒரு படி நெற்களுடன் மேலும் ஒரு படி நெல் என்பது மட்டுமே அவர்கள் கேட்ட கூலி உயர்வு) வேண்டும் என்ற கோரிக்கையை 1967 ல் முதல் முதலாக முன்வைத்தனர்.
ஆனால் பல நிலச்சுவாந்தார்கள் கூலி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்க மறுத்தனர்.
இத்தனை நாட்கள் நம்மிடம் கூலி வேலை பார்த்த தலித் அடிமைகள் கூலி அதிகமாக கேட்டால் அதை ஆதிக்க சாதி வெறியர்கள் எப்படி ஏற்பார்கள்.
( இங்கு கூலி அதிகமாக கேட்பது என்பது பிரச்சனை இல்லை தலித்துகள் எப்படி அதை கேட்கலாம் அவர்களுக்கு எப்படி இதை கேட்கும் துனிச்சல் என்பதே பிரச்சனை )
இதனால் கோவமான நிலச்சுவாந்தார்கள் விவசாய சங்கம் இருப்பதால் தானே இந்த நாய்கள் எல்லாம் கேள்வி கேட்கிறார்கள் என்று நினைத்தனர் எனவே சங்கத்தில் இருந்தவர்களை தாக்குவது அவர்களுக்கு வேலை கொடுக்காமல் வெளியில் இருந்து கூலிக்கு ஆட்களை வரவழைப்பது என்று தொடர்ந்து பல்வேறு நெறுக்கடிகளை நிலச்சுவாந்தார்கள் கூலி விவசாயிகளுக்கு உருவாக்கி கொண்டே இருந்தனர்.
இந்த நிலையில் 25.12.1968 அன்று மாலை கீழ்வெண்மணி கிராமத்தை சேர்ந்த முத்துசாமி, கணபதி என்ற இரண்டு தலித் விவசாயிகளை சவரிராஜ் நாயுடு என்னும் நிலச்சுவாந்தார் வீட்டில் கட்டி வைத்து அடித்தனர்,
இந்த செய்தியை கேள்வி பட்ட கிராமத்து விவசாய தலித் மக்கள் அனைவரும் ஒன்றினைந்து அவர்களை காப்பாற்றி மீட்டனர்.
இதனை அறிந்த மற்ற நிலச்சுவாந்தார்கள் மற்றும் கோபால கிருஷ்ண நாயுடு, துப்பாக்கி ஏந்திய காவல்துறை, அடியாட்கள் என அனைவரும் ஒன்றினைந்து வெண்மணி கிராமத்தில் நுழைந்து கண்ணில் தென்பட்ட அனைத்து தலித் மக்களையும் சுட ஆரம்பித்தனர்.
இதனால் தங்களை தற்காத்து கொள்வதற்காக தொழிலாளர்கள் திருப்பி தாக்கியதில் பக்கிரி சாமி என்பவர் கொல்லப்பட்டார்..,
துப்பாக்கி சூட்டையும், போலீஸ் மற்றும் அடியாட்களின் வெறியாட்டத்தில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்வதற்காக கீழ்வெண்மணி கிராம மக்கள் தப்பித்து ஓட ஆரம்பித்தனர்.
அப்போது கலவரம் நடந்த அந்த தெருவில் கடைசியாக இருந்த ” ராமையா ” என்பவரின் குடிசைக்குள் பெண்கள்,குழந்தைகள்,முதியவர்கள் என மொத்தம் 48 பேர் குடிசைக்குள் புகுந்தனர்.
இதனை கண்ட கோபால கிருஷ்ண நாயுடு தன் வஞ்சகத்தையும், ஆதிக்க சாதி வெறியையும் உயர்த்தி பிடிக்க அங்கு இருந்த அடியாட்களிடம் குடிசையினை கொளுத்த கட்டளை இட்டான்,
குடிசைக்கு தீ வைக்கப்பட்டது.
உள்ளே இருந்த குழ்ந்தைகள் முதியவர்கள் என அனைவரும் கதறினர், எப்படியாவது தப்பிக்கலாம் என்று வெளியே ஓடி வந்த ஆறு பேரில் இரண்டு பேர் வெளியே குடிசை எரிவதில் இருந்து யாரும் தப்பிக்க கூடாது என்று காவலுக்கு நின்ற அடியாட்களிடம் சிக்கி மீண்டும் எரியும் குடிசைக்குள் தூக்கி எறியப்பட்டனர்.
உள்ளே நெறுப்பில் வெந்து கொண்டிருந்த ஒரு தாய் தனது குழந்தையாவது காப்பாற்றபட வேண்டும் என்று தனது ஒரு வயது குழந்தையை வெளியே தூக்கி வீசினால்,
வெளியே நின்ற ஆதிக்க சாதி அடியாட்களுக்கு அது குழ்ந்தையாக தெரியவில்லை அந்த ஒற்றை வயது சிறு குழ்ந்தையும் தலித் தானே என்று மீண்டும் எரிந்து கொண்டிருக்கும் குடிசைக்குள் தூக்கி எறிந்தனர்.
அந்த தீ வெகு நேரம் எரிந்து கொண்டே இருந்தது 1947 ல் இந்தியாவிற்கு சுகந்திரம் கிடைத்து விட்டது என்று சொன்ன அப்பட்டமான பொய் 1968 டிசம்பர் 25 ஆம் தேதி கீழ்வெண்மணியில் 44 தலித்துகள் எரித்து கொல்லப்படும் அந்த தீயில் கருகி சாம்பலாக காற்றில் பறவி கொண்டிருந்தது.
சம்பவம் இரவு 8 மணிக்கு கீவளுர் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டு போலிஸார் இரவு 12 மணிக்கே மிக விரைவாக வந்து விட்டனர்.
மறுநாள் காலை 10 மணிக்கு தான் எரிந்து சாம்பலாகி போயிருந்த அந்த குடிசையின் கதவு திறக்கப்படுகிறது.
உள்ளே மொத்தம் 44 உயிர்கள் அல்லது 44 சடலத்தின் சாம்பல். எந்த அடையாளமும் கண்டுபிடிக்க முடியாதபடி சாம்பலாக கிடந்தது.
அதில் ஒரு தாய் தன் குழ்ந்தை கருகி விட கூடாது என்று இறுகி அணைத்தபடி இருந்த நிலையிலேயே கருகி பிணமாக கிடந்தாள்.
இன்னொரு குழந்தை தன் தாயின் முலையில் வாய் வைத்தபடியே இறந்து கிடந்த காட்சியை எந்த ஒரு காரணத்தாலும் நியாயப்படுத்தவே முடியாது.
இந்த கொடூரமான திட்டமிட்ட ஆதிக்க சாதி படுகொலை நடந்த போது திமுக ஆட்சியில் இருந்தது அண்ணா முதலமைச்சராக இருந்தார்.
இதனை தொடர்ந்து 106 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
எப்போதும் வழங்கப்படும் சிறந்த தீர்ப்புதான் இந்த கொடுமைக்கும் வழங்கப்பட்டது.
அதிக நிலங்களை சொத்துக்களாக வைத்திருப்பவர்கள் தாங்களே நேரடியாக சென்று இப்படியொரு செயலை செய்திருப்பார்கள் என்று நம்பமுடியவில்லை எனவே அனைவரும் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்று 1973 ஏப்ரல் 6 ஆம் தேதி நாடே எதிர் பார்த்த தீர்ப்பு வழங்கப்பட்டது..
ஆதிக்க சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல்.
பாப்பா (ராமய்யன் மனைவி) 25
ஆசைத்தம்பி 10
சந்திரா 12
வாசுகி 23
சுந்தரம் (பெண்) 45
சரோஜா 12
மருதம்பாள் 25
தங்கையன் 5
சின்னபிள்ளை (பெண்) 25
கருணாநிதி 12
வாசுகி 5
குருவம்மாள் 30
பூமயில் 16
கருப்பாயி 35
நாச்சியம்மாள் 16
தாமோதரன் 12
ஜெயம் 10
கனகம்பாள் 25
ராமச்சந்திரன் 7
சுப்பன் 70
குப்பம்மாள் 60
பாக்கியம் (பெண்) 35
ஜோதி 10
காளிமுத்து (பெண்) 35
குருசாமி 15
நடராஜன் 5
வீரம்மாள் 22
பட்டு 46
சண்முகம் 13
வேதவல்லி 13
முருகன் 40
ஆச்சியம்மாள் 30
நாகராஜன் 10
ஜெயம் 6
செல்வி 3
கருப்பாயி 50
சோலை 26
நடராஜன் 6
அஞ்சலை 45
ஆண்டாள் 12
சீனிவாசன் 40
காவேரி 50
சீனிவாசன் 38
முருகன் 45
ஆதிக்க சாதி வெறியர்களால் கீழ்வெண்மணிப் படுகொலைகள் நடந்த நாள் இன்று (25.12.1968)
Reviewed by மறத்தமிழன்
on
December 25, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
December 25, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.