நைஜீரியா நாட்டில் 2,500 கிலோ எடைகொண்ட பிளாஸ்டிக் அரிசி மூட்டைகள் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு நைஜீரியாவின் Lagos நகர சுங்கத்துறை அதிகாரிகள் தான் இந்த பிளாஸ்டிக் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து பேசிய தலைமை அதிகாரியான Haruna Mamudu என்பவர், வெளிநாட்டில் இருந்து இந்த மூட்டைகள் கடத்தி வரப்பட்டதாக தெரிகிறது. ஒரு மூட்டையை பிரித்து சோதனை செய்தபோது, சாதாரண அரிசிக்கும் பிளாஸ்டிக் அரிசிக்கும் சிறிதளவு வித்தியாசமும் இல்லை.
ஆனால், அவற்றை முகர்ந்து பார்த்தபோது ஒருவித திரவிய வாசனை வந்ததால் சந்தேகத்தின் பேரில் அரிசியை சமைத்து பார்த்தோம். சில மணி நேரம் கழித்து சமைத்த அரசியை சோதனை செய்தபோது அவற்றில் ஒரு அரிசி கூட வேக வில்லை. அதாவது, சிறிய கல் துண்டுகளை போல் தான் அரிசி இருந்தது.
இதனால் சந்தேகம் வலுத்து அதனை கடத்தியவர்களிடம் விசாரணை நடத்திய போதுஅவை பிளாஸ்டிக் அரிசி என அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதனை தொடர்ந்து, 25 கிலோ எடை கொண்ட 102 மூட்டைகளை அதிகாரிகள் கைப்பற்றினர் என்று கூறினார்.
எனினும், இந்த பிளாஸ்டிக் அரிசி மூட்டைகள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்ற தகவலை அதிகாரிகள் வெளியிடவில்லை.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் பொதுமக்கள் அரிசி உணவை அதிகளவில் உண்டு வருவது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.