Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 26, 2016

கங்கை அமரனின் 22 ஏக்கர் நிலத்தை எப்படி சசி தன் கைகுள் கொண்டுவந்தார் நேரடி ரிபோர்ட் காணொளி


கங்கை அமரனின் 22 ஏக்கர் நிலத்திற்கு ஏன் பாதுகாப்பு தெரியுமா அதிரவைக்கும் அறப்போர் இயக்கதின் ரிபோர்ட் காணொளி

சென்னை OMR ரோட்டில் பயனூர் என்ற இடத்தில் கங்கை அமரனுக்கு 22 ஏக்கரில் ஒரு பங்களா இருந்துள்ளது. இந்த இடம் ஜெயலலிதாவிற்கு பிடித்துள்ளது என அவரை போயஸ் தோட்டத்திற்கு அழைத்துள்ளனர் அவர் தர மறுத்துள்ளார். அதன் பின்னர் சிறுது காலம் கழித்து அவரை மிரட்டி சிசிகலா மற்றும் சுதாகரன் அந்த இடத்தை 13 லட்ச்ததிற்கு எழுதி வாங்கியதாக ஆதாரத்துடன் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது அறப்போர் இயக்கம்.

மேலும் இவரின் இடம் மட்டுமல்லாமல் அதை சுற்றி உள்ள 112 ஏக்கர் நிலத்தை சசிகலா, சுதாகரன் இளவரசி ஆகியோரின் இதே போன்று வாங்கியுள்ளனர். இதில் அதிர்ச்சிகரமான தகவல் என்னவெனில் சென்னை அருகே உள்ள அந்த 112 ஏக்கர் நிலத்தை யாருக்கும் தெரியாமல் இரவு பகலாக போலிஸ் பாதுகாத்து வருதாக அறப்போர் இயக்கும் கூறி அந்த இடத்திற்கே சென்று ஆதாரத்தை வெளியிட்டுள்ளது. எந்த அரசாங்க தொடர்பும் இல்லாதவர்களின் இடத்திற்கு சென்னை கமிஷ்னர் எப்படி பாதுகாப்பு கொடுக்கின்றார் என அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

படம் பிடிப்பதற்காக அந்த இடத்திற்கு வாகனத்தில் சென்றவர்களை அங்குள்ள போலிஸ் துரத்துவதையும் காணொளியில் காண முடிகின்றது.

இந்த இடங்கள் அரசாங்க பதிவுதுறை இணையதளத்தில் ”அரசாங்கத்தின் குளம்” என காண்பிக்கப்படுகின்றது ஆனால் உண்மையில் இந்த இடங்கள் சசிகலா , சுதாகரன், இளவரி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதையும் அறப்போர் இயக்கும் அம்பலப்டுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.