
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது என கீதா எனபவர் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் முதல்வர் ஓபிஎஸ் , சசிகலா உள்ளிட்ட 20 பேர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்யக்கோரி எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது என அவரது குடும்ப நண்பர் கீதா மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜெயலலிதா சிகிச்சையின் போது பதிவான சி.சி.டி.வி காட்சிகளை அப்பல்லோ வெளியிட வேண்டும் என்று அவர் மனுவில் கூறியுள்ளது.
அல்லிக்குளம் எழும்பூர் முதன்மை குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்பு இன்று 10.30 மணிக்கு கீதா(61 )என்பவர் ஆஜராகி சசிகலா OPS உட்பட 20 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க மனு தாக்கல் செய்தார் . மனுவை ஏற்றுக் கொண்ட நடுவர் இன்னும் சிறிது நேரத்தில் விசாரணை நடத்த உள்ளார் . கீதாவுடன் ஏற்கனவே சசிகலாவுக்கு எதிராக வாட்ஸ் அப்புகளில் வாய்ஸ் கொடுத்து சர்ச்சையில் சிக்கிய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி உடன் இருந்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.