December 29, 2016
ஜெயலலிதாவின் 2 கால்கள் நவம்பர் 18ம் தேதியே வெட்டி எரித்து விட்டார்கள்??? லண்டன் டாக்டர்….
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. மருத்துவமனையில் பல்வேறு வகையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அறிக்கைகள் வெளியிட்டது.
ஆனால், அந்த அறிக்கையில் உள்ளவற்றை எதிர் கட்சியினர் மற்றும் அதிமுக
தொண்டர்கள் யாரும் நம்பவில்லை. அது மட்டுமல்ல ஒரு ஈ காக்காவைக் கூட அம்மாவைப் பார்க்க அனுமதிக்க வில்லை சசி தரப்பு.
அதனால் தான் பலவிதமான யூகங்கள் கிளம்பியது. வதந்திகள் கிளம்பியது. அதற்கும் அசைந்து கொடுக்கவில்லை சசிகலா. டெல்லியின் அழுத்தங்களும் அதிகமானது.
கடந்த டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி மாரடைப்பு என்று கூறினார்கள். இரவு ஜெ., இறந்து விட்டதாக அறிவித்தார்கள். ஒரு மாதம் முடியப் போகிறது.
ஜெ., மரணம் பற்றிய பல்வறு சந்தேகங்கள் இன்னும் உலவிக் கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில், பிரபல தமிழ் வாரஇதழ் ஜெயலலிதாவின் கால்கள் எங்கே என்றும் அவரது பயோடேட்டாவில் அவரின் உயரம் 5.5 அடி என்றும், சவப்பெட்டியின் அளவு 6 அடி என்றும் ஜெயலலிதா உடல் இருப்பதோ 3 1/2 அடி என்று அதில் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் இன்னொரு யூகமும் சமூகவலைத்தளங்களில் வேகமாகப் பரவுகிறது. பிரான்ஸ் தமிழச்சி கிளப்பிய பூதம் இது என்கிறார்கள்.
அதாவது நவம்பர் பதினெட்டாம் தேதிதான் அழுகிய நிலைக்கு போன அம்மாவின் இரண்டு கால்களும் ஆப்ரேஷன் மூலம் வெட்டி எடுக்கப்பட்டதாம்.
கால் மூட்டுகளுக்கு கீழே இரண்டு கால்களும் நீக்கப்பட்டு பட்டிணப்பாக்கம் கடற்கரையில் யாரும் இல்லாத இடமாகப் பார்த்து எரித்தார்கள் என்கிறார்கள்.
ஜெ., ஒருமுதல்வராக இருந்தார். அவரின் மருத்துவ சந்தேகங்களை பொதுவெளியில் யார் வேண்டுமானாலும் கேட்கலாம் என்கிற நிலையில், அந்த சந்தேகங்களுக்கு ஏன் பதிலளிக்காமல் மவுனம் சாதிக்கிறார்கள்.
ஆனால், தற்போது பதவிகளை மட்டுமே தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.
கேட்கவே பகீர் என்று இருக்கிறது. இது எந்த அளவிலான உண்மை என்பதை மருத்துவமனையோ..அல்லது சசிகலா தரப்போ தான் விளக்க வேண்டும்.
ஜெயலலிதாவின் 2 கால்கள் நவம்பர் 18ம் தேதியே வெட்டி எரித்து விட்டார்கள்??? லண்டன் டாக்டர்….
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 29, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 29, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.