Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 22, 2016

குஜராத் ஆக்சிஸ் வங்கியில் மீண்டும் சோதனை; சந்தேகத்திற்கு இடமான 19 கணக்குகளில் ரூ. 89 கோடி!


ஆமதாபாத்தில் உள்ள ஆக்சிஸ் வங்கி கிளையில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 19 சந்தேகத்திற்கு இடமான கணக்குகளில் ரூ. 89 கோடி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

ஆமதாபாத்தில் இன்று நடத்தப்பட்ட சோதனையில் வருமான வரித்துறையினர் 19 சந்தேகத்திற்கு இடமான கணக்குகளில் ரூ. 89 கோடி பணம் இருந்ததை கண்டுபிடித்து உள்ளனர். ‘இந்தியா டுடே’ தகவலின்படி ஆமதாபாபாத் ஆக்சிஸ் வங்கி கிளையில் அதிகமான முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது, விசாரணையானது அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடக்காரர்களை நோக்கி செல்கிறது என கூறப்பட்டு உள்ளது.

 இவ்விவகாரத்தில் தொடர்பு உடையதாக 4 வங்கி அதிகாரிகள் வருமான வரித்துறையினர் கண்காணிப்பின் கீழ் வந்து உள்ளனர்.

தொடர்ச்சியாக...

ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து, கருப்பு பணத்துக்கு எதிரான வேட்டையை வருமான வரித்துறை தீவிரப்படுத்தி உள்ளது. ஆங்காங்கே, புதிய ரூ.2,000 நோட்டுகள் கோடிக்கணக்கில் பிடிபட்டு வருகின்றன.

இம்மாத தொடக்கத்தில் டெல்லி சாந்தினி சவுக்கில் உள்ள ஆக்சிஸ் வங்கி கிளையில் நடத்தப்பட்ட சோதனையில், 44 போலி கணக்குகளில் ரூ.100 கோடி டெபாசிட் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சாந்தினி சவுக்கில் உள்ள ஆக்சிஸ் வங்கி கிளையில் மட்டும் ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்னர் ரூ. 450 கோடி வரையில் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது என தகவல்கள் வெளியாகியது. 44 கணக்குகள் போலியான தகவல்களை கொண்டு தொடங்கப்பட்டது, தங்கம் வாங்குவதற்காக இந்த பண பரிவர்த்தனை செய்யப்பட்டு இருக்கலாம் என்பது வருமான வரித்துறையினர் சந்தேகமாக இருந்தது.

முறைகேடுகளில் ஈடுபட்டதாக, ஆக்சிஸ் வங்கியின் 19 அதிகாரிகளை வங்கி மேலிடம் சமீபத்தில் இடைநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், டெல்லியில் அவ்வங்கியின் 2 அதிகாரிகளை அமலாக்கப்பிரிவு சமீபத்தில் கைது செய்தது. 3 கிலோ தங்க கட்டிகளையும் பறிமுதல் செய்தது. கடந்த மாதம் வருமான வரித்துறையினர் காஷ்மீரே கேட் கிளையில் இருந்து இருவர் 3.5 கோடி புதிய ரூபாய் நோட்டுகளுடன் வந்தபோது சிக்கினர். நொய்டாவில் ஆக்சிஸ் வங்கி கிளையில் வருமான வரி அதிகாரிகள் கடந்த 15-ம் தேதி அதிரடி சோதனை நடத்தினர். வங்கி கணக்குகளை ஆய்வு செய்தனர். அதில், 20 வங்கி கணக்குகளில் மொத்தம் ரூ.60 கோடி டெபாசிட் செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் அவ்வங்கியின் எம்.டி. மற்றும் சிஇஒ ஷிகா சர்மா பேசுகையில்
சில ஊழியர்களின் நடத்தையானது சங்கடம் மற்றும் வருத்தம் அடைய செய்வதாக உள்ளது என்றார். மேலும் இதுபோன்ற செயலில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.