Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 14, 2016

”17 வயதில் இருந்தே ஆண்களுடன் செல்ல பழகினேன், 2 ஆண்கள் வந்து விட்டால் வீட்டிற்கு வருவதற்கு மறுநாளாகிவிடும்” : எச்.ஐ.வி கைதியின் வாக்குமூலம்



வாழ்க்கையில் அவல நிலையை யாரும் தேடிப்போவதில்லை. ஆனால் சில சமயம் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு அவர்கள் ஆட்பட்டுவிடுகின்றார்கள்.
அவ்வாறு, தான் எடுத்த பிழையான தீர்மானத்தால் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளாகி, தனது வாழ்கையை தொலைத்த பெண் ஒருவரின் நியாயப்பாடுகளுக்கு அப்பாலான சோகக் கதையே இது,
வவுனியா வளமிக்க நிலப்பரப்பில் விவசாயத்தை ஜீவனோபாயமாகக் கொண்ட மக்கள் வாழும் மிகவும் ரம்மியமான குக்கிராமம்.
மூன்று தசாப்தகால ஆயுதப் போராட்டம் வடிந்து போன பின்னர் செழுமை பயிரில் மக்கள் வாழ்வை மீள் எழுப்பப் பாடு பட்ட தருணம்.
ஆனால் பின் தங்கிய சூழல் , வறுமை , அடிப்படை வசதிகள் போய்ச் சேராத நிலை . இவை இந்த குக்கிராமத்தின் அடையாளங்களாகும்.
சிறார்கள் கல்வியைத் தேடி கூரையற்ற பள்ளி அறைகளுக்கு ஓடினார்கள். ஒரு வேளை உணவு, கொஞ்சம் கல்வி இதுவே அந்த சிறார்களின் பெற்றோர்களின் எதிர்பார்ப்பாகும்.
அவ்வாறு குறித்த பாடசாலைக்கு அனுப்பப்பட்ட – மாணவியே நவலக் ஷி
தனது வாழ்வில் இடம்பெற்ற இன்னல்கள் அழைத்துச் செல்லப்பட்ட இடங்கள் என்பவற்றை நவலக் ஷி இவ்வாறு விபரிக்கின்றார்,
ஆண்கள் அழைப்பார்கள். நான் செல்வேன். அவ்வாறு சென்று பொலிஸாரிடம் பிடிபட்ட பின்னர் இங்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.
இந்த இடம் நன்றாக உள்ளது. காலையில் எழுவது , வேலைகளைச் செய்வது , வழிபாடுகளில் ஈடுபடுவது , சிகிச்சைக்குச் செல்வது அதன் பின்னர் புத்தகங்களை வாசிப்பது , நித்திரைக்குச் செல்வது என்பது எமது அன்றாட செயற்பாடுகளாகும்.
வரலாற்று நூல்கள் , தமிழ் புத்தகங்கள் மற்றும் ஒரு சில சிறிய ஆங்கில மொழி புத்தகங்களையும் விரும்பி வாசிப்பேன்.
அம்மா , அப்பா , அண்ணா , இரண்டு சகோதரிகள் . தம்பி உயிரிழந்து விட்டார். நான் குடும்பத்தில் இரண்டாவது.
தற்போது எனக்கு 25 வயது. ஒரு மகன் இருக்கின்றான். 10 ஆம் வகுப்பு வரை பாடசாலைக் கல்வியை கற்றேன்.
எமது கிராமத்தில் இருந்த அக்கா தான் எனக்கு பல்வேறு ஆசைகள் காண்பித்து இவ்வாறான நிலைக்கு தள்ளப்பட்டேன்.
பின்னர் அடிமையாகி போனேன். 17 வயதில் இருந்தே ஆண்களுடன் செல்ல பழகினேன். அவர்கள் எனக்கு பணம் தருவார்கள்.
அம்மா , அப்பா போதைக்கு அடிமையானவர்கள். வறுமை , பணம் இல்லை. சாப்பிட உணவு இல்லை. தம்பிக்கும் தங்கைக்கும் புத்தகம் வாங்க பணம் தேவைப்பட்டது. எனவே தான் ஆண்களுடன் போனேன்.
ஆரம்பத்தில் எனக்கு மிகவும் வேதனையாகவும் கஷ்டமாகவும் இருந்தது . ஒரு வகையான மருந்தினை அந்த அக்கா எனக்கு கொடுத்தார்.
அதன் பின்னர் எவ்விதமான பிரச்சினையும் இல்லை. என்னை கட்டுப்படுத்த முடியாது அந்த தொழில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.
ஆரம்பத்தில் அம்மா அமைதியாக இருந்தார். ஆனால் பின்னர் என்னை கண்டித்து நிறுத்தினார்.
ஆனால் என்னால் நிறுத்த முடியாமல் போனது. பல சந்தர்ப்பங்களில் அம்மாவுடன் சண்டை பிடித்துக் கொண்டு ஆண்களுடன் சென்றேன்.
அம்மா , அப்பா போதைக்கு அடிமையானவர்கள். எனவே அவர்கள் எமது தேவைகளை நிறைவேற்றவில்லை.
ஆகவே ஒரு கட்டத்தில் ஆண்களுடன் செல்வதை என்னை அறியாமலேயே தொழிலாக்கிக் கொண்டேன்.
இவ்வாறு செல்லும் போது ஒரு ஆணிடம் இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் வரை பணம் கிடைக்கும். ஒரு நாளைக்கு இரண்டு பேருடன் செல்லும் சந்தர்ப்பங்களும் உண்டு.
பாடசாலை 2 மணிக்கு விட்ட உடன் நான் வீட்டிற்கு வந்து விடுவேன் . அதன் பின்னர் ஆண்கள் என்னைத் தேடி வந்து வீட்டிற்கு சற்றுத் தொலைவில் இருந்து கொண்டு பணத்தை காண்பிப்பார்கள். அப்போது நான் செல்வேன்.
இவ்வாறு வரும் ஆண்கள் என்னை யாழ்ப்பாணம் , முல்லைத்தீவு மற்றும் வவுனியா போன்ற நகர்ப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்வார்கள்.
இவ்வாறு சென்றால் மாலை 6 மணியளவில் வீட்டிற்கு வந்து விடுவேன். இரண்டு ஆண்கள் வந்து விட்டால் வீட்டிற்கு வருவதற்கு மறுநாளாகிவிடும்.
இவ்வாறு ஆண்களுடன் செல்கின்ற விடயம் எனது அம்மாவிற்கு தெரியும் . ஆனால் தந்தைக்கு தெரியாது.
அதே போன்று நான் கல்வி பயின்ற பாடசாலையில் குறிப்பிட்ட ஓரிரு ஆசிரியர்கள் என்மீது சந்தேகப்பட்டிருந்தார்கள்.
ஆனால் அவர்கள் என்னிடம் கேட்கவோ அது குறித்து விசாரிக்கவோ இல்லை. எவ்விதமான கட்டுப்பாடுகளோ கண்டிப்புகளோ எனக்கு இருக்க வில்லை.
கிடைக்கும் பணத்தில் தம்பி தங்கைகளுக்கும் வீட்டுத் தேவை களுக்கும் செலவிட்டேன். அம்மாவிற்கும் கொடுத்தேன்.
நாளுக்கு நாள் என்னை அழைத்துச் செல்லும் ஆண்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. 11 ஆம் வகுப்பு கல்வியுடன் பாடசாலை செல்வதை நிறுத்திக்கொண்டு முழு நேரமும் பணத்திற்காக ஆண்களுடன் செல்வதை வழமையாக்கிக் கொண்டேன்.
இவ்வாறான தீரா நோய்கள் மற்றும் சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்படும் நிலை , உறவினர்களை பிரிந்திருக்கும் அவலம் ஏற்படும் என்பதை அன்று நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் இன்று எனது விதி தலைகீழாகியுள்ளது.
எனது வாழ்வில் மறக்க முடியாத நாள் அன்று….
ஒரு 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் வழமைபோல் எனது வீட்டிற்கு அருகில் வந்து பணத்தைக் காட்டினார்.
காலையில் 9.30 மணி இருக்கும் . வீட்டில் யாரும் இல்லை. முல்லைத்தீவு போவோம் என்று அழைத்தான்.
அவசரமாக வேறு ஆடை அணிந்து கொண்டு அந்த ஆணுடன் சென்றேன். 11.45 மணியிருக்கும் முல்லைத்தீவு நகருக்குச் சென்று இறங்கினோம்.
என்னை அழைத்து வந்தவர் தான் முன்னே முதலில் செல்வதாகவும் அவரை பின்தொடருமாறும் கூறினார் . அதன் பிரகாரம் நானும் அவரை தொடர்ந்தேன்.
குறித்த விடுதிக்கு அருகில் சற்றும் எதிர்பாராதவாறு பொலிஸ் உத்தியோகஸ்தர் இருந்தார். அவர் என்னை நன்றாக பார்த்தார்.
எங்கே ? போகின்றீர்கள் என என்னிடம் கேட்டார். அவருடன் போகின்றேன் என்றேன். எங்கே ? என்றார். அங்கு என்றேன். ஏன் ? என்றார். ஆண்கள் அழைத்து செல்வார்கள் , நான் போவேன் பணம் தருவார்கள் என்றேன்.
பின்னர் அவர்கள் என்னை பிடித்து கொண்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று நீதி மன்றில் ஆஜர்படுத்திய பின்னர் இங்கு அனுப்பப்பட்டேன்.
கடந்த ஒன்றரை வருட காலத்திற்கும் அதிகமான காலங்களாக இந்த மறுவாழ்வு இல்லத்தில் வாழ்கின்றேன்.
தனிமையின் உச்ச கொடூரங்களைப் பல சந்தர்ப்பங்களில் அனுபவித்துள்ளேன். விடு

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.