
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் மக்களிடம் பண பரிவர்த்தனையில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ரூபாய் நோட்டு விவகாரத்தை கிளப்பி பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முழுவதையும் எதிர்க்கட்சிகள் முடக்கின.
இந்த நிலையில் பாராளுமன்ற கூட்டத்தில் இறுதி நாளன்று பிரதமர் மோடியை ராகுல் சந்தித்து ரூபாய் நோட்டு விவகாரம் பற்றி பேசினார். இதை மற்ற எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.
இதனால் காங்கிரசுக்கும், மற்ற எதிர்க்கட்சிகளுக்கும் இடையே அதிருப்தி நிலவியது. ராகுல் காந்தியால் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையில் பிளவு ஏற்பட்டு விட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் ரூபாய் நோட்டு விவகாரத்தில் மீண்டும் எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன் பயனாக சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதாதளம், மதசார்பற்ற ஜனதாளம், தி.மு.க., இடது சாரிகள் உள்ளிட்ட 16 கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன.
காங்கிரஸ் தலைமையில் இந்த 16 கட்சிகளை ஒன்று சேர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்த சோனியா திட்டமிட்டுள்ளார். வருகிற 27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இது தொடர்பாக சோனியா பத்திரிகையாளர்களை சந்தித்து பேச உள்ளார்.
அன்று சோனியாவுடன் 16 கட்சித் தலைவர்களும், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இடம் பெறுவார்கள். அப்போது புதிய அறிவிப்புகளை எதிர்க்கட்சிகள் வெளியிடும் என்று தெரிகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.