December 19, 2016
திருமணத்திற்கு மறுத்த 16 வயது சிறுமி பெற்றோர்களாலேயே எரித்துக் கொலை
நாமக்கல் அருகே திருமணத்திற்கு மறுத்த 16 வயது பெண்ணை அவரது பெற்றோரே எரித்துக்கொன்றதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நாமக்கல் அருகேயுள்ள வளையப்பட்டி, வாழவந்தி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ், இவரின் இரண்டாவது மகளான 16 வயதே ஆன ஐஸ்வர்யா என்பவருக்கும், சேந்தமங்கலத்தை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் திருமணம் செய்ய இரு வீட்டாரும் முயற்சி செய்து வந்துள்ளனர்.
இந்த திருமணத்திற்கு ஐஸ்வர்யா எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து நாமக்கல்லில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு ஐஸ்வர்யா தகவல் கொடுத்ததாகத் தெரிகிறது.
இதனையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் ஐஸ்வர்யாவை மீட்டு நாமக்கல்லில் உள்ள காப்பகத்தில் சேர்த்துள்ளனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமை காப்பகத்திற்கு சென்ற ஐஸ்வர்யாவின் உறவினர்கள், தந்தை தங்கராஜ் உடல் நிலை மோசமாக இருப்பதாக கூறி அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால், சனிக்கிழமை இரவு உடல்நிலை சரியில்லாமல் ஜஸ்வர்யா இறந்துவிட்டதாகக் கூறி அவரது உடலை சுடுகாட்டில் எரித்துள்ளனர். ஐஸ்வர்யாவின் மரணத்தில் சந்தேகம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த சிலர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து ஐஸ்வர்யாவின் பெற்றோரான தங்கராஜ், ராஜம்மாள் ஆகிய இருவரையும் எருமபட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.
திருமணத்திற்கு மறுத்த 16 வயது சிறுமி பெற்றோர்களாலேயே எரித்துக் கொலை
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 19, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 19, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.