Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 15, 2016

16ம் நாள் ஜெ., காரியம் முடி…! பொதுக்குழுவ கூட்டு…! அண்ணன் எப்போ சாவான்.. திண்ணை எப்போ காலியாகும் கதை



கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். அண்ணன் எப்போ சாவான். திண்ணை   எப்போ காலியாகும் என்று. இதுபோலதான் உள்ளது, அதிமுகவில் சசிகலாவின் நிலையும்.
ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரிதான். பாட்சா படத்தில் ரஜினியோட ஜெனகராஜ் கூடவே வரலாம் அதற்காக பாட்சாவாக முடியாது.
அதுபோலதான் அரசியலில் சசிகலா கூடவே இருந்திருக்கலாம் அதற்காக அதிமுக பொது செயலாளர் பதவியா? தொண்டர்கள் வெறி கொண்ட நிலையில் எதிர்த்து வருகின்றனர்.
எதிர்த்து பேச வேண்டிய சீனியர்களே வாய்முடி உள்ளனர். தங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்ள சின்னம்மாவே சரணம் என்று காலில் விழுந்து வருகின்றனர்.
இது கட்சியில் நடக்கிற ஒன்று. ஆனால், பத்திரிக்கை ஜாம்பவான்கள் சசிகலா என்னமோ சசிகலா தலைமையில் அதிமுக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது போன்று சந்தித்து வருகின்றனர்.
ஜெயலலிதாவின் பாதி உடல் எங்கே? அவர் எப்போது இறந்தார்? மருத்துவ மனையில் இருக்கும் போது ஏன் அவர் உடலை காட்டவில்லை?
உண்மையில் அவர் இறந்தாரா அல்லது கார்டனிலேயே இறந்தாரா ?மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார், இருக்கிறார் என்று மக்கள் ஏமாற்றப்பட்டனரா என்று தெரியாத நிலையில் அதிமுக தொண்டர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் அண்ணன்எப்போ சாவான், திண்ணை எப்போ  காலியாகும் என்பது போல தொண்டர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் 21ம் தேதி நடப்பதாக கூறப்படும் பொதுக்குழுவில் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.
இந்த தகவல் அதிமுக தொண்டர்கள் மத்தியில் கோபத்தையும், வெறியையும், அதிர்ச்சியையும், கவலையையும் உண்டாக்கி உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.