Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 26, 2016

சுனாமி தாக்கியதன் 12-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு..!



சுனாமி தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 12-வது ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அனுசரிக்கப்படுகிறது.
கடந்த 2004 டிசம்பர் 26-ம் தேதி இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக தமிழகத்தில் நாகை, வேளாங்கண்ணி, கடலூர், சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் கடலோரப் பகுதிகளை சுனாமி தாக்கியதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அவர்களின் நினைவாக இன்று அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவுப் பூங்காவில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதுபோல், சென்னை மெரினா கடற்கரையில் பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும், அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், கொட்டில்பாடு உள்ளிட்ட பல்வேறு மீனவக் கிராமங்களில் அமைதி ஊர்வலமும் நடைபெற உள்ளது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.