Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 22, 2016

டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்கள் 11 பேர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு 11 புதிய உறுப்பினர்கள் நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி 11 புதிய உறுப்பினர்கள் நியமித்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. சேதுராமன், பாலுசாமி, மாடசாமி, ராமமூர்த்தி, ராஜாராம், பிரதாப் குமார், சுப்பையா, முத்துராஜ், கிருஷ்ணகுமார், புண்ணியமூர்த்தி, சுப்பிரமணியன் உள்பட 11 பேர் நியமிக்கப்பட்டனர். இதை எதிர்த்து திமுக, பாமக, புதிய தமிழகம் கட்சிகள் தொடர்ந்த வழக்கில் 11 பேர் நியமனம் ரத்து என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

வழக்கு விவரம்:
புதிதாக நியமிக்கப்பட்ட 11 உறுப்பினர்களும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என குற்றச்சாட்டு எழுந்தது. 11 உறுப்பினர்கள் மீதும் பர குற்றச்சாட்டுகள் உள்ளதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்தன. டி.என்.பி.எஸ்.சி.க்கு 11 உறுப்பினர்கள் நியமித்த அரசாணை சட்டவிரோதம் என தீர்ப்பளித்துள்ளது. மேலும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை என்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.