Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 26, 2016

இந்துக்கள் 10 பிள்ளையை பெற்றுக்கொள்ளுங்கள், கடவுள் பார்த்துக் கொள்வார் - வாசுதேவானந்த்


இந்துக்கள் ஒவ்வொருவரும் 10 பிள்ளைகளை பெற்றுக்கொள்ள வேண்டும், கவலை வேண்டாம் குழந்தைகளை கடவுள் பார்த்துக்கொள்வார் என வாசுதேவானந்த சரஸ்வதி கருத்து தெரிவித்துள்ளார்.

நாக்பூரில் நடந்த தர்ம சான்ஸ்க்ருதி மஹாகும்பா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாசுதேவானந்த சரஸ்வதி பேசினார்.


அவர் பேசியதாவது: ஒவ்வொரு இந்து தம்பதியும் 10 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். அதிக குழந்தைகளை வளர்க்க முடியாதே என்ற கவலை வேண்டாம். உங்கள் குழந்தைகளை கடவுள் காப்பாற்றுவார். அதே சமயம் இந்து மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

பிரதமர் மோடி கருப்புப் பணத்தை ஒழிக்க 500,1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்று அதிரடியாக உத்தரவிட்டார். அதே போல இந்துக்கள் கடவுளாக பார்க்கும் பசுவதை தடை செய்ய வேண்டும். இதற்கு அதிரடி சட்டத்தை இயற்ற வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.