Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 22, 2016

ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு சிறை; மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு


சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ டிரைவருக்கு சென்னை மகளிர் நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து  தீர்ப்பளித்துள்ளது. சென்னை சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது 6 வயது மகள் கடந்த 2014  மார்ச் 23ம் தேதி அந்த பகுதியில் தனது அண்ணனுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, அங்கு வந்த ஆட்டோ டிரைவர் ஹரிகரன்  (25),  ஆட்டோக்குள் சிறுமியை தூக்கிச்சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனால், சிறுமி அலறி கூச்சலிட்டாள்.

இதை சிறுமியின் அண்ணன் தடுத்தபோது, அந்த சிறுவனை ஹரிகரன் மிரட்டியுள்ளார். இது குறித்து சிறுவன் தனது பெற்றோரிடம்  கூறியுள்ளான். பெற்றோர் உடனே சாஸ்திரிநகர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் ஹரிகரனை கைது செய்த  போலீசார் அவர் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி கலைமதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் கவுரி அசோகன்  ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் ஹரிகரனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும்,  ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.