December 16, 2016
100பேர் உ யிரிழப்புகறுப்புப் பண நடவடிக்கையால், கேரளாவில்தான் முதன்முலாக உயிரிழப்பு ஏற்பட்டது
100பேர் உ யிரிழப்புகறுப்புப் பண நடவடிக்கையால், கேரளாவில்தான் முதன்முலாக உயிரிழப்பு ஏற்பட்டது. இங்குள்ள ஆலப்புழா மாவட்டம் குமாரபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். பழைய நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கி முன்பு வரிசையில் காத்திருந்தபோது திடீரென அவர் மயங்கிவிழுந்தார். மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற வழியிலேயே அவர் உயிரிழந்தார். அதே மாநிலத்தில் உண்ணி என்பவர், டெபாசிட் செய்யப் படிவங்களைப் பூர்த்தி செய்ய காத்திருந்தபோது மாடியில் இருந்து உயிரிழந்தார்.மும்பை, முலாந்த் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாத் வர்தாக். இவர், வரிசையில் நின்றபோது திடீரென மயங்கிவிழுந்து உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் உள்ள இந்தியன் வங்கியில் பணம் எடுக்க வந்த முதியவர் சுப்ரமணியன், பணம் எடுத்தபின் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்.அவர், பாபநாசம் அருகே உள்ள வாழ்க்கை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார்.சுப்ரமணியன் மரணம் பற்றி அவரது உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து உடனடியாக அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து உயிரிழந்த சுப்ரமணியனைப் பார்த்து கதறி அழுதனர். பிணமாக தரையில் கிடந்த சுப்ரமணியனை, கடந்து பணம் எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன. பணம் எடுக்க வரிசையில் நின்று உயிரிழப்பு ஏற்படுவதும், உடல்நிலை பாதிப்பு ஏற்படுவதும் தொடர்ந்துகொண்டு உள்ளது.இதுவரை பணம் எடுக்க வங்கி மற்றும் ஏ.டி.எம்-களில் வரிசையில் நின்று 100 பேர் உயிரிழந்ததாக புள்ளி விவரங்கள்தெரிவிக்கின்றன
கதறி அழுத முதியவர்....கல் நெஞ்சையும் கரையவைத்ததுஹரியானா மாநிலம் கூர்கானில், வங்கி வரிசையில் நின்ற முதியவர் ஒருவர், தனது இடத்தைத் தவறவிட்டதால்... அவர் கதறி அழுத புகைப்படம், ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளியாகி இருந்தது. இதைப் பார்ப்பவர்கள் நெஞ்சம் கல்லாக இருந்தாலும் கலங்கிவிடும். ஒரு சாமான்யனின் வலியை பிரதிபலித்த புகைப்படம் இதுவாகத்தான் இருக்கும். மத்திய அரசின் இந்த நடவடிக்கை, எஞ்சியிருந்த மனிதநேயமும் சிதறி சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பதை உலகுக்கு உணர்த்திக் கொண்டுதான் இருக்கிறது. நாமும் மனிதம் செத்துவிட்டது என்று ஸ்டேட்டஸ் போடுவோம்... வருத்தம் தெரிவிப்போம். பின்னர், அதனைக் கடந்து அடுத்த வேலைகளை நோக்கி நகர்வோம். இதற்கு பதில் சொல்லக்கூடிய மத்திய
100பேர் உ யிரிழப்புகறுப்புப் பண நடவடிக்கையால், கேரளாவில்தான் முதன்முலாக உயிரிழப்பு ஏற்பட்டது
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 16, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 16, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.