சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது என்று தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இதனை மத்திய அரசு கைவிடாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அதன் ஒரு கட்டமாக சேலம் இரும்பாலையின் 51% பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பதாக மத்திய எஃகுத் துறை அமைச்சர் விஷ்ணுதியோ சிங் நாடாளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எழுத்து மூலம் அளித்திருந்த பதிலில் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து சேலம் இரும்பாலையை தனியாருக்கு தாரைவார்க்கும் நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டிருக்கின்றன.
சேலம் இரும்பாலை மட்டுமின்றி, பத்ராவதி இரும்பாலை, துர்காப்பூர் இரும்பாலை ஆகியவற்றின் பங்குகளும் தனியாருக்கு விற்பனை செய்யப்பட இருக்கின்றன. பங்குகளை வாங்கும் நிறுவனம் 2 கட்ட ஏலத்தின் மூலம் தீர்மானிக்கப்படவிருப்பதாக செபி அமைப்பிடம் மத்திய அரசின் சார்பில் இந்திய எஃகு நிறுவனம் அளித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் தொடங்கி அடுத்த சில வாரங்களில் இரு கட்ட ஏலங்களும் நடத்தி முடிக்கப்பட்டு, சேலம் இரும்பாலை உள்ளிட்ட நிறுவனங்களின் நிர்வாகம் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சேலம் இரும்பாலை நஷ்டத்தில் இயங்குவதாகவும், அதை லாபத்தில் இயங்கச் செய்யவே தனியாருக்கு வழங்குவதாகவும் மத்திய அரசு கூறுவது தவறாகும். இப்போது நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால், தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும் என்பதற்காகவே சேலம் இரும்பாலை நஷ்டமாக்கப்பட்டதோ என்ற ஐயம் எழுகிறது. தற்போது சூப்பர் இரும்பாலையாக இருக்கும் சேலம் ஆலையை ஒருங்கிணைந்த ஆலையாக நவீனப்படுத்த வேண்டும் என்று கடந்த 15 ஆண்டுகளாக அதன் தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதை செய்யாதது தான் சேலம் ஆலை நஷ்டத்தில் இயங்க காரணமாகும்.
சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்கும் முயற்சி அரசுக்கோ, தொழில்துறை வளச்சிக்கோ எந்த வகையிலும் உதவாது. சேலம் பகுதியிலுள்ள தாது வளங்களை தனியார் ஆலைகள் போட்டியின்றி கொள்ளை அடிப்பதற்கே உதவும். மேலும், சேலம் ஆலையில் பணியாற்றும் 2000 தொழிலாளர்களையும் இந்த நடவடிக்கை பாதிக்கும். எனவே, சேலம் இரும்பாலையை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தைக் கைவிட்டு, ஆலையை நவீனமயமாக்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசின் அமைச்சர்கள் குழுவும் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிடும்படி வலியுறுத்த வேண்டும். இதற்கு பிறகும் தனியார் மயமாக்கும் முயற்சிகள் தொடர்ந்தால் அதற்கு எதிராக சேலம் பகுதியுள்ள மக்களையும், இரும்பாலை தொழிலாளர்களையும் திரட்டி மிகப்பெரிய அறவழிப் போராட்டத்தை பாமக நடத்தும்" என்று தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.