Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 5, 2016

போலீசார் அனைவரும் கட்டாயம் பணிக்கு திரும்ப உத்தரவு!


தமிழகம் முழுவதும் விடுப்பில் சென்ற போலீசார் அனைவரும் காலை 7 மணிக்குள்  கட்டாயம் பணிக்கு திரும்ப வேண்டும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், சென்னை அப்போலோ மருத்துவமனையைச் சுற்றி சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கியமாக சென்னை மாநகர் முழுவதும் காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம் பாக்கம், அண்ணாசாலை உள்ளிட்ட சென்னையின் முக்கிய பகுதிகளில் ஆங்காங்கே தடுப்புகளும் போடப்பட்டுள்ளது.

முக்கியமாக தமிழகம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களுக்கு ரெட் அலர்ட் செய்யப்பட்டுள்ளது. இதனால், விடுமுறையில் இருந்த அனைத்து காவல் துறை அதிகாரிகள் அனைவரையும் காலை 7 மணிக்கு சீருடையில் கட்டாயம் பணிக்கு திரும்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், விடுமுறையில் சென்ற போலீசார் அனைவரும், கட்டாய பணிக்கு திரும்பி வருகின்றனர். மேலும், தமிழகம் முழுவதும் நாளை 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு உள்ளதாகவும் போலீசார் வட்டாரத்தில் கூறப்படுகிறது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.