‘‘1949-ல் இருந்து தமிழகம், பல அரசியல் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. இதுவரை இல்லாத மிகப்பெரிய மாற்றம், தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் நிகழ உள்ளது. அந்த நிகழ்வு ஏற்படும்போது, அதைப் பயன்படுத்தி ஆளுகிற கட்சியாக பி.ஜே.பி மாற வேண்டும். அதற்கு ஏற்ப இதை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்று நாகர்கோவிலில் அக்டோபர் மாதம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது இப்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது... அது மட்டுமல்லாமல் அ.தி.மு.க கட்சிக்குள் நிலவும் இந்த அசாதாரண சூழலை பி.ஜே.பி பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறது என்ற முணுமுணுப்பும் கேட்கத் தொடங்கி உள்ளது . இந்தச் சூழலில் நாம் பொன்.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்.
“ஜெயலலிதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது குணம் அடைந்து வீடு திரும்பி... மீண்டும் ஆட்சியைத் தொடருவார் என்ற நம்பிகையோடுதான் இருந்தேன். ஆனால், அவருடைய இழப்பு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர், துணிச்சல்மிக்க தலைவர். எந்த முடிவு எடுத்தாலும் அதனை நடைமுறைப்படுத்த முடியும் என்ற உறுதி அவரிடம் இருந்தது. நடைமுறைப்படுத்தி அதனை வெற்றி பெறச் செய்யும் ஒரு சில தலைவர்களில் அவரும் ஒருவர். கட்சியில் உள்ள நடைமுறைகளில் அ.தி.மு.க-வுக்கும் எங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அந்த வித்தியாசங்களை எல்லாம் தற்போது பேசிக்கொண்டிருக்க முடியாது. முதலமைச்சராக அவரைப் பார்த்தபோது... நான், மத்திய அமைச்சராக மாநில அரசாங்கத்துக்கு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்தேன். அந்த வகையில், முதல்வருடன் இணக்கமாக இருந்து வந்தேன்.

தமிழகத்தில் மெஜாரிட்டியுள்ள அரசு நடந்துவருகிறது. அதனை நடத்தியவர் முதல்வர் ஜெயலலிதா. அவர், உடல்நிலை சரியில்லாமல் அப்போலோவில் இருந்தபோது... அந்த நேரத்தில் தமிழக அரசுக்கு உதவி செய்வது மத்திய அரசின் கடமை. அதற்காக, மத்திய அரசு காத்திருந்தது. இதனால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள்தான் குற்றம் சொல்ல வேண்டும். அவர்கள் இதைப் பற்றி எந்தக் குற்றமும் சொல்லவில்லை. தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், அ.தி.மு.க இதுகுறித்து எந்தவொரு குற்றச்சாட்டும் எங்கள் மீது கூறவில்லை.
இந்த நிலையில், இரண்டு அரசுக்கும் இடையே இருக்கும் இணக்கமான உறவை விரும்பாதவர்கள்தான் இதுபற்றிச் சொல்கிறார்கள். தமிழகத்தில் பி.ஜே.பி-யை எப்படி வளர்க்க வேண்டும் என்பது குறித்து எங்களுக்குத் தெரியாத விஷயம் எதுவும் இல்லை. அதனை நாங்கள் செய்வோம். இதையெல்லாம் பயன்படுத்திச் செய்ய வேண்டிய அவசியமில்லை. எங்கள் கொள்கை மீது, உழைப்பு மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. எனவே இந்த நேரத்தில் இதைப் பேச வேண்டிய அவசியம் இல்லை’’ என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.