Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 3, 2016

ஜனவரி வரைதான் ரேஷன் கார்டில் ஆதார் எண்ணை இணைக்க முடியும்! தமிழக அரசு கெடு


ரேஷன் கார்டில் மீண்டும் உள்தாள் ஓட்டுவது ஆறு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள தமிழக உணவுத்துறை, ரேஷன் கார்டுதாரரிடம் இருந்து, ஆதார் விபரம் வாங்கும் பணி அடுத்தாண்டு ஜனவரி மாதம் முடிக்கப்படும் என்று கூறியுள்ளது.

தமிழகத்தில், நேற்றைய நிலவரப்படி 2.03 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. அவற்றின் செல்லத்தக்க காலம் 2009ல் முடிவடைந்தது. பின், ஆண்டுதோறும் ரேஷன் கார்டில் உள்தாள் ஒட்டி செல்லத்தக்க காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. பழைய ரேஷன் கார்டுக்கு பதில், இம்மாதத்துக்குள் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்க உணவுத்துறை முடிவு செய்தது. ஆனால், பலர் 'ஆதார்' விபரம் தராததால் அந்த பணி பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், வழக்கம் போல ரேஷன் கார்டில் உள்தாள் ஒட்ட உணவுத் துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

இதுகுறித்து, உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "ரேஷன் கடையில் உள்ள 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில் ரேஷன் கார்டு எண், ஆதார் எண் பதிவு செய்யப்படுகிறது. எனவே, உள்தாள் ஒட்டாமல் அந்த எண்ணைப் பதிவு செய்து பொருட்கள் வழங்க திட்டமிடப்பட்டது.
ஆனால், பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன. இதற்காக, ரேஷன் கார்டில் உள்தாள் ஒட்ட வேண்டியுள்ளது. உள்தாளில், ஓராண்டு என குறிப்பிடாமல், ஆறு மாதங்களுக்கு என இருக்கும்.

ரேஷன் கார்டுதாரரிடம் இருந்து ஆதார் விபரம் வாங்கும் பணி 2017 ஜனவரி மாதம் முடிக்கப்படும். பிப்ரவரி முதல் அனைத்து உறுப்பினர்களின் ஆதார் விபரமும் வழங்கிய குடும்பங்களுக்கு, ஸ்மார்டு கார்டு தரப்படும். அதற்குள், ஆதார் தராதவர்களுக்கு தீவிர ஆய்வுக்கு பின்னரே ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்" என்று கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.