மருத்துவமனையில் இருக்கும் ஜெயலலிதாவை நான் ஏன் போய் பார்க்க வேண்டும். என் கட்சிக்காரன் ஆஸ்பத்திரியில இருந்தா போய் பார்ப்பேன். அவங்களை நான் ஏன் பாக்கணும். அதான் போகலை," என மதுரை நடந்த பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பேசினார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு பொது மேடைகளில் பங்கேற்றுள்ளார் விஜயகாந்த். கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்கு பின்னர் பொது மேடைகளில் தலை காட்டாமல் இருந்த விஜயகாந்த், திருப்பரங்குன்றம் இடைத்தேர்த்ல் பிரச்சாரத்துக்காக மீண்டும் மேடையேறியுள்ளார்.
மக்கள் நலக்கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. விலகியது, ஜெயலலிதா அப்போலோவில் அனுமதி உள்ளிட்ட பல விஷயங்களில் கருத்து தெரிவிக்காமல் அமைதியாகவே இருந்தார் விஜயகாந்த். பிரேமலதா தான் செய்தியாளர்களிடம் கட்சி சார்ந்த விஷயங்கள் குறித்து பதிலளித்து வந்தார். இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பின் அவர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் என்பதால், அரசியல் களத்த்ல் இவரது பேச்சு கவனத்துடன் பார்க்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் தனபாண்டியனுக்கு வாக்கு கேட்டு அவனியாபுரத்தில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது.
மக்களுக்கக என் கட்சியினர் இருக்கிறார்கள், எனக்காக என் கட்சியினர் இருக்கிறார்கள். அவர்களுக்காக நான் இருக்கிறேன். நான் ஜெயலலிதாவை ஆஸ்பத்திரியில் போய் பார்க்கலைன்னு கேக்கறாங்க?. நான் ஏன் போகணும்? அவர் குணமாகி வரணும்னு தான் நினைக்கிறேன். அங்க போறவங்களோட நோக்கம் வேற, என் கட்சிக்காரன் ஆஸ்பத்திரியில இருந்தா போய் பார்ப்பேன். அவங்கள நான் ஏன் போய் பார்க்கனும், அதனால தான் போகலை.
ஜல்லிக்கட்டுகாக டெல்லி வரை சென்று போராடினேன்....ஒண்ணும் நடக்கல, ஆனால், நிச்சயமா ஜல்லிக்கட்டு கொண்டுவரப்படும், அதுக்கு இந்த தொகுதியில தனபாண்டியன் ஜெயிக்கனும். டிவியில பேசும்போது ஸ்டாலின் ஜல்லிக்கட்டை கொண்டு வருவோம்கிறார் ஸ்டாலின்.. கலைஞரும் ஸ்டாலினும்தானே ஜல்லிக்கட்டுக்கு எதிராக கையெழுத்து போட்டவர்கள், அவர்கள் எப்படி ஜல்லிக்கட்டு கொண்டு வருவார்கள்? தே.மு.தி.க. தொடர்ந்து ஜல்லிக்கட்டுகாக போராடும், முன்வைத்த காலை பின் வைக்கும் பழக்கம் எனக்கு கிடையாது.
தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேண்டாம் என்றுதான் மக்கள் நல கூட்டணியுடன் சேர்ந்தேன். அவ்வளவுதான், அங்கு தொகுதி உடன்பாடு மட்டும் வைத்துக் கொண்டேன். ஆனால் அதை மக்கள் ஏற்கவில்லை. அதனால் விலகி விட்டோம்.
இன்னும் திருப்பரங்குன்றம் பகுதியில் தண்ணீர் வசதி இல்லை, எப்படி தண்னீர் விடுவார்கள்? தொடர்ந்து மணல் கொள்ளை அடிக்கணுமே. மணல் கொள்ளை அடிக்கவே தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணாமல் இருக்கிறார்கள். இதுவரை ஆண்ட திமுகவும் அதிமுகவும் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு கானாதது ஏன்? யாரை கண்டும் எனக்கு பயம் இல்லை நானும் மதுரையில் பிறந்தவன்தான், திருப்பரங்குன்றம் முருகர்தான் என்னுடைய கடவுள்.
மக்கள் விரும்பும் தலைவர்கள் மட்டும்தான் ஆட்சிக்கு வர வேண்டும்... பணத்துக்காகவும், சீட்டுக்காகவும் என்றும் விலைபோக மாட்டேன். என்றும் மக்களுக்காக இருப்பேன்..
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.