கள்ளநோட்டுகளை பயன்பாட்டுக்கு விடும் கும்பல்களால் எந்த தவறும் செய்யாத பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். தங்கள் கையில் இருப்பது கள்ளநோட்டுகள் என்று கூட தெரியாமல் வங்கிக்குச்சென்று பணத்தை மாற்றும்போது அவர்கள் வேதனையில் சிக்கிக் தவிக்கின்றனர்.
நாடு முழுவதும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ம் தேதி அறிவித்தார். அதைத்தொடர்ந்து தங்கள் கையில் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை புதிய 2000 ரூபாய் நோட்டுகளாக மக்கள் மாற்றி வருகின்றனர். இதனால் வங்கிகள், அஞ்சலகங்கள், கருவூலங்கள் ஆகிய இடங்களில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
கறுப்புப் பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலில் ஒரு நாளைக்கு 4000 ரூபாய் வரை பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அடுத்து 4,500 ரூபாய் என்று மாற்றப்பட்டது. தற்போது, 2000 ரூபாய் என்று குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பணத்தை மாற்ற வருபவர்களின் வலது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படுகிறது. இவ்வாறு பணத்தை மாற்ற விதிக்கப்பட்ட கெடுபிடிகளால் வங்கிகளில் மக்கள் கூட்டம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் பணத்தை மாற்ற வருபவர்களிடமிருந்து 500, 1000 ரூபாய் நோட்டுகளில் சில கள்ள நோட்டுகள் இருப்பதாக வங்கி வட்டாரங்கள் அதிர்ச்சித் தகவலை தெரிவித்தன. தினமும் இதுபோன்ற கள்ள நோட்டுகள் பிடிபடுவதாகவும், வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அந்த நோட்டுகளை கொண்டு வருபவர்களுக்குத்தான் பாதிப்பு ஏற்படுகிறது.
இதுகுறித்து வங்கி வட்டாரங்கள் கூறுகையில், "500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தப்பிறகு வங்கிகளுக்கு அந்த பணத்தை மாற்ற மக்கள் வருகின்றனர். அவர்கள் கொடுக்கும் ரூபாய் நோட்டுகளை பரிசோதித்தப் பிறகே பணத்தை மாற்றிக் கொடுக்கிறோம். அவ்வாறு பரிசோதிக்கும்போது சிலர் கொண்டு வரும் 1000, 500 ரூபாய் நோட்டுகள் கள்ளநோட்டுகள் என்பது தெரியவருகிறது. அதுதொடர்பாக அவர்களிடம் விளக்கம் கேட்கிறோம். பிறகு அவர்கள் சம்மதத்தின்பேரில் அந்த கள்ளநோட்டு கிழிக்கப்படுகிறது. இதனால் கடைசியில் கள்ளநோட்டுகளை வைத்திருப்பவர்களே பாதிக்கப்படுகின்றனர். முன்பெல்லாம், கள்ளநோட்டுகளை வங்கிக்குக் கொண்டு வருபவர்கள் குற்றவாளியாக கருதப்படுவர். அவருக்கு அந்த ரூபாய் நோட்டு எப்படி வந்தது என்று விசாரணை நடத்திய பிறகே சம்பந்தப்பட்ட நபர் விடுவிக்கப்படுவர். ஆனால் இப்போதுள்ள நடைமுறையில் கள்ளநோட்டு என்று கண்டுபிடிக்கப்படும்போது அந்த நோட்டை கொண்டு வரும் நபரிடம் விளக்கம் கேட்டு அந்த நோட்டைப் பயன்படுத்த முடியாதவாறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
உதாரணத்துக்கு சில தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்கும்போது கள்ளநோட்டுகள் வருவதாக மக்கள் சொல்கின்றனர். அவ்வாறு வரும் நோட்டுகள் மாற்றப்படும்போதுதான் அது கள்ளநோட்டு என்பது சம்பந்தப்பட்டவருக்கு தெரிய வருகிறது. இதனால் கள்ளநோட்டு வைத்திருக்கும் நபர் அந்த நோட்டின் மதிப்புக்கு ஏற்ப அவர் பாதிக்கப்படுகிறார். இதுபோன்ற தருணங்களில் மக்கள், பணம் எடுத்த ஏ.டி.எம் மையத்தின் அருகில் உள்ள வங்கி கிளையை அணுகலாம். அவர்கள் ஏ.டி.எம் மையத்திலிருந்து அந்த ரூபாய் நோட்டு எடுக்கப்பட்டதை நிரூபித்தால் அவருக்கு அந்த ரூபாய் நோட்டின் மதிப்பிற்கு ஏற்ப வேறு ரூபாய் நோட்டு வழங்கப்படும். ஆனால், கள்ளநோட்டு என்பதை நிரூபிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதனால் கள்ளநோட்டு வைத்திருக்கும் நபர், அதன் இழப்பை வேறுவழியின்றி ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. எனவே, ஏ.டி.எம் மையங்களில் கள்ளநோட்டுகள் பயன்பாட்டை தடுத்திருந்தால் மக்கள் பாதிக்கப்படமாட்டார்கள். ஆனால், ஏ.டி.எம் மையங்களில் பணம் நிரப்பும் பணிகளில் பெரும்பாலும் தனியார் ஏஜென்ஸிகளே ஈடுபடுகின்றன. அங்குள்ள ஊழியர்களில் சில கறுப்பு ஆடுகள் மூலம் கள்ளநோட்டுகள் ஏ.டி.எம் வழியாக மக்களுக்கு கிடைத்து விடுகிறது. யாரோ செய்த தவறுக்கு தேவையில்லாமல் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தப் பிறகு இதுபோன்ற பிரச்னைகள் மக்களுக்கு ஏற்படாது என்று கருதுகிறோம்" என்றனர்.
இதுகுறித்து வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், "நீங்கள் எந்த தவறும் செய்யாதபோது கள்ளநோட்டுகள் உங்கள் கையில் இருந்தால் மக்கள் பயப்பட தேவையில்லை. வங்கியில் உங்கள் தரப்பு நியாயத்தை சொல்லும்போது கள்ளநோட்டு எப்படி வந்தது என்பதை வங்கியும், போலீசும் விசாரித்து நடவடிக்கை எடுக்கும். கள்ளநோட்டுகளை ஒழிக்கவே அரசு முயற்சித்து வருகிறது. ரூபாய் நோட்டுகளை நீங்கள் வாங்கும்போது அதை பரிசோதித்துப் பெறுங்கள். ஏ.டி.எம் மையத்திலிருந்து எடுக்கப்படும் ரூபாய் நோட்டுகளில் கள்ளநோட்டுகள் இருப்பது தெரியவந்தால் அருகில் உள்ள ஏ.டி.எம் மையங்களின் வங்கி கிளைக்கு உடனடியாக சென்றால் அந்த ரூபாய் நோட்டு எப்படி ஏ.டி.எம் இயந்திரத்துக்கு வந்தது என்பதை கண்டறிய முடியும். உங்களைப் போல அடுத்தநபர் பாதிக்கப்படுவதை தடுக்கவும் செய்யலாம். எனவே கள்ளநோட்டு என்று தெரியவந்தால் தயங்க வேண்டாம். தவறே செய்யாமல் கள்ளநோட்டை கடைசியாக வைத்திருக்கும் நபருக்கு இழப்பீடு கிடைக்க வங்கிகள் இந்த பிரச்னையில் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அதை பெரும்பாலான வங்கிகள் செய்வதில்லை என்பது வேதனைக்குரியது" என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.