கோவாவில் இரண்டு மிகப்பெரிய உட்கட்டமைப்பு திட்டங்களை துவக்கி வைத்து பேசிய மோடி, “கறுப்புப் பணத்தை ஒழிக்கவே மக்கள் எங்களை தேர்வு செய்தனர். எனக்கான அனைத்தையும் நாட்டுக்காக உதறி தள்ளிவிட்டேன்” என கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
கோவாவில் மோபா என்ற இடத்தில் க்ரீன் ஃபீல்ட் சர்வதேச விமான நிலையம் (greenfield airport) மற்றும் டெம் என்ற இடத்தில் மின்னனு நகரும் (electronic city) உருவாக்க, இன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் பேசிய மோடி “அக்பர் தனது அமைச்சரவையில் ஒன்பது ரத்தினங்கள் உள்ளதாக குறிப்பிடுவார். அதே போன்று என் அமைச்சரவையில் கோவாவில் இருந்து வந்த மனோகர் பாரிக்கர் உட்பட பல ரத்தினங்கள் இருப்பதை பெருமிதத்துடன் கூறிக் கொள்கிறேன்.
கறுப்புப் பணத்தை ஒழிக்கவே மக்கள் என்னை தேர்வு செய்தனர். வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வருவது நம் கடமை. பல எம்.பி.,க்கள் நகைகள் வாங்க பான் கார்டு கட்டாயம் வேண்டும் என்னும் விதி வேண்டாம் என என்னிடம் கூறியது அதிர்ச்சியளித்தது. மேலும் உயர் பதவியில் ஒரு நாற்காலியில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பதில் விருப்பமில்லை. என் குடும்பம், வீடு என எனக்காக இருந்த அனைத்தையும் நாட்டுக்காக விட்டு வந்துள்ளேன்”, இவ்வாறு கண் கலங்கி பேசினார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.