குழந்தைகள் மத்தியில், 1990-களில் இந்த மனிதரைக் காட்டி யார் இவர்? என்று கேட்டால், தீவிரவாதிகளிடம் இருந்து இந்தியாவை மீட்கக் கூடியவர் என்ற பதில் வரும். விஜயகாந்த், இவர் வெறும் நடிகர்தான். ஆனால் இன்று, இணையதளங்களில் இவரது மீம்களுக்கு மவுசு அதிகம். இவரது 'ப்ரஸ் மீட்' என்றால் அந்த வீடியோக்கள் கட்டாயம் வைரலாகும். இவர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டங்கள்தான் தமிழக அரசியலின் ரிலாக்ஸ் பக்கங்கள் என இவரை ஒரு நகைச்சுவையாகத் தான் ஊடகங்கள் சித்தரித்துள்ளன.
சினிமா, அரசியல் இரண்டிலுமே தன்னை தக்க வைத்துக்கொள்ள முடிந்தவரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் விஜயகாந்த் என்னும் அந்த நபர். ஆனால், அவர் செய்யும் ஒவ்வொரு செயலையும் நகைச்சுவையாக மாற்றி, அவரின் மதிப்பைக் குறைத்து விட்டது. அவர் எங்கு சென்றாலும் அவருக்கு எரிச்சலூட்டக் கூடிய செயல்கள் நடக்கும்போது, மனிதர் இடம், பொருள் என்று எதையும் பொருட்படுத்தாமல் தன்னுடைய கோபத்தை வெளிக்காட்டி விடுவார். இந்த குணம்தான் அவருக்கு எதிரியாக நிற்கிறது. அதுவே மீம் கிரியேட்டர்களுக்கு மூலாதாரமாக நிற்கிறது.
இளைஞர்கள் பலர், விஜயகாந்த்-ஐ கேலி கிண்டல்செய்து பல வீடியோக்கள், மீம்கள் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஃபேஸ்புக் பதிவுகளில் விஜயகாந்த்தான் மீம் ஆயுதம். யாரையாவது கலாய்க்க வேண்டும் என்றாலும் போட்டோ கமெண்ட் விஜயகாந்த் தான். ஆனால் கூகுள் தேடலில், 'Best citizen of Tamilnadu - சிறந்த குடிமகன்' என்ற தலைப்பில் யார் பெயர் வருகிறது? என்று பாருங்கள். நமக்குக் கிடைப்பது விஜயகாந்த்-ன் பெயர் தான். எதற்காக விஜயகாந்த் பெயர் இந்த தலைப்பில் வருகிறது? அப்படி அவர் என்ன பெரிதாக செய்துவிட்டார்? என்ற கேள்விகள் உங்களுக்குள் எழலாம். அதற்குப் பதில், அவரைப் பற்றி தெரிந்து கொண்டாலே போதும்.

அரசியல், சினிமா மட்டும் போதும் என விஜயகாந்த் நின்று விடவில்லை. ஏழை மக்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் அவர் பல உதவிகள் செய்துள்ளார். ஏழை மாணவர்களின் படிப்புக்கு பண உதவி செய்துள்ளார். தமிழ்நாடு மட்டும் அல்லாமல், குஜராத் பூகம்பம், ஒடிஷா புயல் போன்ற தேசிய அளவிலான இயற்கைச் சீற்றங்களானாலும் அவர் அளித்த உதவிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில், மத்திய அரசிடம் இருந்து அவர் விருது வாங்கியுள்ளார். இன்னும் சொல்லப்போனால் விஜயகாந்த் படப்பிடிப்பு தளத்தில்கூட யாரும் சாப்பிடாமல் வேலை செய்யக் கூடாது என நினைப்பவர். அவரது வீட்டில் எப்போதும் ஏராளமானோருக்கு உணவு வழங்கப்பட்டு வருவது வழக்கமான நிகழ்வு. இந்த செய்திகளை கடந்து வராதவர்கள் நம்மில் எத்தனை பேர்.
விஜயகாந்த்-க்கு 2001-ம் ஆண்டு மத்திய அரசு சிறந்த சேவை செய்தவர்களுக்கான விருது அளித்தது. அதில் பல மாநிலங்களைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஆனால், தமிழ்நாட்டில் இருந்து விஜயகாந்த் மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருந்தார். "டெல்லி தமிழ் இளைஞர் பண்பாட்டுக் கழகம்" சார்பில் அவருக்கு பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது. சென்னை பெருவெள்ளத்தின்போது, வேட்டியை மடித்து கட்டி இறங்கியது இந்த விஜயகாந்த் எனும் மீம் நாயகன்தான். யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அவரது கட்சி தோற்கலாம், ஜெயிக்கலாம்...சில நேரங்களில் அவரது கருத்துக்கள் ஏற்க முடியாததுதான். ஆனால் விஜயகாந்த் என்ற ஒரு தனி மனிதராகப்பட்டவர் நல்ல உள்ளம் படைத்தவர். அவரது கோபத்துக்கும், சட்டெனப் பேசும் குணத்திற்கும் அவரைக் கிண்டல் செய்வது நியாயம் அல்ல. சமீபத்தில் ஒரு சமூக வலைதளப் பதிவும் இதைத்தான் சொல்லியிருந்தது. விஜயகாந்த்-க்கு அரசியல் செய்யத் தெரியவில்லை என்பதே உண்மை.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.