ஆண்டுக்கு ஒரு டாலர் மட்டுமே சம்பளமாக பெறப் போவதாகவும் ஆண்டு இறுதி விடுமுறை கூட எடுக்காமல் மக்கள் பணியாற்றப் போவதாகவும் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ள டெனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். கருத்துக் கணிப்புகள் ஹிலரி வெற்றி பெறுவார் என்றன. ஆனால், அதிரடியாக டிரம்ப் வெற்றி பெற்றிருக்கிறார்.மக்களிடையே ஹிலரிக்கு ஆதரவு இருந்தாலும் பிரதிநிதித்துவ வாக்குகள் கிடைக்காத காரணத்தினால் ஹிலரியால் அதிபர் ஆக முடியவில்லை. தற்போது அமெரிக்கா முழுவதுமே டிரம்புக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக பெண்கள் டிரம்புக்கு எதிராக திரண்டுள்ளனர். 'டிரம்புக்கு வாக்களித்ததால் ஒரு மாதத்துக்கு என் பக்கத்தில் நெருங்கக் கூடாது' என பெண் ஒருவர் தனது கணவருக்கு கட்டளையே போட்டிருக்கிறார். இப்படியெல்லாம் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் டிரம்ப் தொடர்ந்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு அமெரிக்க மக்களை கலங்கடித்து வருகிறார்.
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்ட பின், டிரம்ப் நேற்று சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு ஒரு மணி நேரம் பேட்டியளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறுகையில் ''அமெரிக்க அதிபராக ஆண்டுக்கு ஒரு டாலர் மட்டுமே சம்பளமாக பெறப் போவதாக தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதத்தில் ஒரு வீடியோ பேட்டியின்போது,'' அமெரிக்க அதிபர் ஆனால் சம்பளமாக எதையும் பெறப்போவதில்லை '' என்று டிரம்ப் அறிவித்திருந்தார். தற்போதை அதனை உறுதி செய்துள்ளார் டிரம்ப். அதே வேளையில் சட்டப்படி ஆண்டுக்கு ஒரு அமெரிக்க டாலரை சம்பளமாக பெற டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
மேலும் ''அமெரிக்க அதிபரின் உண்மையான சம்பளம் கூட எனக்குத் தெரியாது. பல்வேறு மக்கள் நலப் பணிகளில் நான் அதிக கவனம் செலுத்த வேண்டியது இருக்கிறது. சுகாதாரத்துறை, வரிவிதிப்பு உள்ளிட்ட முக்கிய பணிகளை பார்க்க வேண்டும். அதனால், ஆண்டு இறுதிகளில் சுற்றுலாகூட நான் போகப் போவதில்லை '' எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபரின் ஆண்டுச் சம்பளம் 4 லட்சம் டாலர்கள் ஆகும். அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் மிகப் பெரிய கோடீஸ்வரர். தற்போது 70 வயதான இவருக்கு 3.7 பில்லியன் டாலர்கள் அளவுக்கு சொத்து இருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் 10க்கும் மேற்பட்ட பங்களாக்கள் இருக்கிறது. கடந்த 1971-ம் ஆண்டு டிரம்ப் ஆர்கனைசேஷன் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கினார். அடுக்குமாடிக் கட்டடங்கள், ஹோட்டல்கள், கோல்ப் மைதானங்கள், கெசினோக்களை நிர்மாணிப்பதில் டிரம்பின் நிறுவனம் வெற்றி கண்டது. இதன் மூலம் கோடி கோடியாக சொத்து சேர்த்த டிரம்ப்தான். இப்போது ஆண்டுக்கு ஒரு அமெரிக்க டாலர் சம்பளமாக பெறப் போவதாக அறிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் முதன்முறையாக முதல்வராக பொறுப்பேற்ற போது மாதம் ஒரு ரூபாய் தான் சம்பளமாக பெற்றார். தற்போது தமிழக முதல்வரின் பாணியை டிரம்ப் கடைபிடித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.