மதுரையில் உள்ள டி.வி.எஸ் நகர் வீட்டில் அமர்ந்தபடியே தேர்தல் முடிவுகளை பார்த்துக் கொண்டிருக்கிறார் மு.க.அழகிரி. ' தேர்தல் பணிகளில் போதிய அக்கறை காட்டவில்லை. இந்த முடிவுகள் எதிர்பார்த்ததுதான்' என அவரிடம் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆதரவாளர்கள்.
தஞ்சை, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மூன்று தொகுதிகளிலும் அ.தி.மு.க வேட்பாளர்களே முன்னணியில் உள்ளனர். அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆகிய இரு கட்சிகளுக்குக் இடையே பெரிய அளவில் போட்டியில்லை. இடைத் தேர்தலில் ஆளுங்கட்சியே வெற்றி பெரும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, 'திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அழகிரியை களம் இறக்கியிருந்தால், கணிசமான அளவுக்கு வாக்குகளை வாங்கியிருக்கலாம் என்ற பேச்சும், தி.மு.க.வில் ஒருசாரார் மத்தியில் பேச்சு இருந்தது. பொருளாளர் ஸ்டாலின் கோபப்படுவார் என்பதால், யாரும் இதைப் பற்றிப் பேசவில்லை. கடந்த சில நாட்களாக தன்னை சந்திக்க வருபவர்களிடமும், 'அனைவரையும் அரவணைத்துச் செல்லும் வகையில் ஸ்டாலின் செயல்பட வேண்டும் என விரும்புகிறேன்' என ஆதங்கப்பட்டார் கருணாநிதி.
இந்நிலையில், இன்று காலையில் இருந்தே தொலைக்காட்சி முன்பு அமர்ந்து தேர்தல் முடிவுகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் மு.க.அழகிரி. அவரிடம் பேசிய அவரது ஆதரவாளர்கள், "மூன்று தொகுதிகளிலும் சரியானமுறையில் கட்சிக்காரர்கள் வேலை பார்க்கவில்லை. திருப்பரங்குன்றம் வேட்பாளர் சரவணன் மீது கட்சிக்காரர்களே அதிருப்தியில் இருந்தனர். அங்கு நல்ல வேட்பாளரைப் போட்டிருக்கலாம். ஒவ்வொரு ஓட்டுக்கும் இரண்டாயிரம் ரூபாய் வரையில் அமைச்சர்கள் கொடுத்தார்கள். நமது தரப்பில் இருந்து ஆயிரம் ரூபாயாவது கொடுத்திருக்கலாம். வெறும் 500 ரூபாய் கொடுத்ததால்தான் இவ்வளவு வாக்கு வித்தியாசம்.
திருமங்கலம் தேர்தலின்போது எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் வரையில் கொடுத்தார்கள். அப்போது வரையில் நமது பக்கத்தில் இருந்து 500 ரூபாய் கொடுக்கலாம் என்பதுதான் திட்டம். எதிர்க்கட்சியே கொடுக்கும்போது நாம் ஏன் கொடுக்கக் கூடாது எனக் களமிறங்கி ஓட்டுக்கு 1,500 முதல் 2 ஆயிரம் வரையில் கொடுத்தோம். நாம் எதிர்பார்த்ததற்கும் மேலான வெற்றி கிடைத்தது. அன்று நாம் தோற்றிருந்தால் காங்கிரஸ் நம் பக்கம் இருந்து விலகிச் சென்றிருக்கும். இதையெல்லாம் இப்போது உள்ளவர்கள் மறந்துவிட்டார்கள்" என விரிவாகவே விவாதித்துள்ளனர். அவர்களின் பேச்சுக்களுக்கு அழகிரி தரப்பில் இருந்து, எந்த கருத்தும் வெளிவரவில்லை. அனைத்தையும் மௌனமாகவே கேட்டுக் கொண்டார் என்கின்றனர்.
"நாடாளுமன்றத் தேர்தலின்போதும் சட்டமன்றத் தேர்தலின்போதும் கட்சித் தலைமையில் உள்ளவர்களோடு கடுமையான மோதல் போக்கில் இருந்தார் அழகிரி. அந்த நேரத்தில், தன்னுடைய வலிமையைக் காட்ட வேண்டும் என்பதற்காக மாற்றுக் கட்சித் தலைவர்களை சந்தித்தார். இதுபோன்று செய்தால், தலைமை இறங்கி வரும் என்று நினைத்தார். மாறாக, மோதல் போக்கு நீடித்துக் கொண்டிருந்தது. கட்சிக்குள் மீண்டும் சேர வேண்டும் என செல்வி மூலம் தூது அனுப்பிக் கொண்டிருந்தார். அதற்கு சரியான நேரமாக, கலைஞருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மூன்று முறை அவரை நேரில் சென்று சந்தித்தார் அழகிரி.
அவர் எதிர்பார்த்ததைப் போலவே, மீண்டும் கட்சிக்குள் கொண்டு வருவதற்கான வேலைகள் தொடங்க ஆரம்பித்தன. அனைத்து தரப்பினரும் ஏற்கும் வகையில் அழகிரி வருகை அமைய வேண்டும் என கலைஞர் விரும்புகிறார். இந்த நேரத்தில் எதையாவது பேசி, கட்சிக்குள் வீண் குழப்பம் ஏற்படுத்திவிட வேண்டாம் என்பதால் அமைதியாக இருக்கிறார். தேர்தலின்போதும் எந்தக் கட்சிக்கும் ஆதரவாக அவர் குரல் கொடுக்கவில்லை. நல்லது நடக்கும் வரையில் யாரும் எதுவும் பேசிவிட வேண்டாம் எனக் கண்டிப்புடன் கூறிவிட்டார். அறிவாலயத்தின் அழைப்புக்காக காத்திருக்கிறார்" என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.