செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களின் விரலில் கட்டாயம் மை வைக்கப்படும் என்று ஆர்.பி.ஐ அறிவித்தது. ஆனால் மை வராத காரணத்தால் பழைய 500, 1000 ரூபாய் மாற்றிக் கொடுக்கப்படவில்லை. இதனால் வங்கிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அந்த ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கி, அஞ்சலகம், கருவூலம் ஆகியவற்றில் மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்தது. இதனால் கடந்த 10-ம் தேதி முதல் வங்கிகளில் மக்கள் செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகின்றனர். அனைவருக்கும் பணம் கிடைக்கும் வகையில் ஒரு நபருக்கு 4,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தது. அடுத்து, 500 ரூபாய் அதிகரித்து 4,500 ரூபாயாக கொடுக்கப்பட்டது. தற்போது 2,000 ரூபாய் என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற சில விதிமுறைகளை ரிசர்வ் வங்கி கடந்த 15-ம் தேதி அமல்படுத்தியது. அதில் பணத்தை மாற்ற வருபவர்களின் வலது கை, ஆள்காட்டி விரலில் அழியாத மை வைக்கப்படும் என்று அறிவித்தது. ஆனால், மை இல்லாமல் 16-ம் தேதி சில வங்கிகள், அஞ்சலகங்களில் மாற்றி கொடுக்கப்பட்டது. ஒரே நேரத்தில் மை வாங்க ஆர்டர்கள் மைசூரில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு குவிந்தன. இதனால் ஆர்டர் செய்த அனைவருக்கும் மை சப்ளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஆர்.பி.ஐ.யின் ஆலோசனைப்படி வேறு இடங்களிலும் மை வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் பெரும்பாலான வங்கிகளுக்கு மை கிடைக்கவில்லை. சென்னையில் காலதாமதமாக மை வைக்கும் பணி தொடங்கப்பட்டது. மை கிடைக்காத காரணத்தால் பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றிக் கொடுக்கும் பணியை தற்காலிகமாக வங்கிகள் நிறுத்தியுள்ளன. இந்த விவரங்கள் தெரியாமல் மக்கள் வங்கிக்கு சென்று ஏமாந்து செல்கின்றனர். ஏ.டி.எம் மையங்களில் பணம் இல்லாததால் மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். எப்போதாவது இயங்கும் ஏ.டி.எம் மையங்கள் முன்பு கால்கடுக்க மக்கள் காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து வங்கி வட்டாரங்கள் கூறுகையில், ''மை இல்லாத காரணத்தால் பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றிக் கொடுக்கப்படவில்லை. மை வந்தவுடன் மக்கள் பணத்தை மாற்றிக் கொள்ளலாம். அதுவரை வங்கி கணக்கில் டெபாசிட் செய்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இதன்காரணமாக வங்கிக்கு வரும் மக்களின் கூட்டம் குறைந்துள்ளது'' என்றனர்.
இருப்பினும் சில வங்கிகள் மை இல்லை என்றாலும் பணத்தை மாற்றிக் கொடுப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அந்த வங்கிகளைத் தேடி மக்கள் செல்கின்றனர். இதனால் மை இல்லாமல் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுக்கும் வங்கிகள் முன்பு கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதுகின்றன. பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் எழுந்துள்ள சிக்கல் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் 2000 புதிய ரூபாய் நோட்டுகளுக்கு சில்லறை கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். இதனால் எப்போது புதிய 500 ரூபாய் நோட்டு வரும் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் அதுகுறித்த எந்த தகவலையும் ஆர்.பி.ஐ தெரிவிக்காமல் அமைதியாக இருக்கிறது.
இதுதொடர்பாக ஆர்.பி.ஐ. தென்மண்டல இயக்குநர் சதக்கத்துல்லாவின் செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டால் அவர் பதில் அளிப்பதில்லை. நாட்டின் நலனுக்காக கறுப்புப் பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்க பிரதமர் மோடி அறிவித்த திட்டத்தில் சில உயர் அதிகாரிகளால் ஏற்படும் குளறுபடிகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மக்களின் பணத்தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.