பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மாற்றுத் திறனாளிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்றது. இந்த போட்டியில், இங்கிலாந்தைச் சேர்ந்த லியம் தாமஸ் ஃபீல்டிங் செய்து கொண்டிருக்கும்போது, அவரது செயற்கை கால் தனியாக விழுந்துவிட்டது. அதைப் பொருட்படுத்தாமல், தொடர்ச்சியாக பந்தை தடுத்து கீப்பரிடம் த்ரோ செய்தார்.
செயற்கை கால் இழந்தாலும், விளையாட்டில் முழு ஈடுபாடு காண்பித்த அவரது செயல் பரவலாக பாராட்டப்பட்டு வருகிறது. இது பற்றி முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் பால் காலிங்வுட்டும் அவரது ட்விட்டர் பக்கத்தில், பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.