ஆஸ்திரேலியால மேட்ச் நடந்தா 5 மணிக்கு அலாரம் வைச்சு எழுந்து மேட்ச் பாக்கணும், வெஸ்ட் இண்டீஸ் மேட்ச்சுக்கு நைட்டு 12 மணி வரைக்கும் கண்னு முழிச்சு மேட்ச் பாக்கணுனு லைவ் கிரிக்கெட் பாக்குற வெறித்தனமான கிரிக்கெட் ஃபேனா நீங்க. அந்த லைவ் எப்படி நடக்குதுனு தெரியுமா? எத்தனை கேமரா சுத்தி சுத்தி படமெடுக்குது தெரியுமா?
ஒரு லைவ் மேட்சைகூட செய்ய மொத்தமா 29 கேமராக்கள் தேவை. அதில் 19 கேமராக்களை மனிதர்களும் 10 தானியங்கி கேமராக்களும் இயங்கும். ஒவ்வோரு கேமராவும் டைரக்டரின் கட்டளைக்கு ஏற்றவாறு இயங்கும் ஒவ்வோரு கேமராக்கும் ஒரு சிறப்பு பணி உள்ளது. உதாரணமாக சட் ஸ்க்ரீனுக்கு எதிராக உள்ள கேமராவில் பந்து வீச்சாளர் ஓடி வருவது, பேட்ஸ்மேன் பந்தை எதிர்கொள்வது, ஸ்லிப் பீல்டர்கள், வெற்றி கொண்டாட்டம், அவுட் ஆகி பேட்ஸ்மேன் வெளியேறுவது, உள்நுழைவது போன்ற செயல்களை கண்காணிக்கும்.

அடுத்தது பால் ஃபாலோயர் கேமரா அதாவது பேட்ஸ்மேன் பந்தை அடித்தவுடன் பந்தை தொடர்வது. பந்து எங்கு செல்கிறதோ அந்த திசையில் பந்தோடு பயணிப்பது உதாரணமாக விராட் ஒரு பந்தை துரத்தி ஃபீல்டிங் செய்வதை பந்து பேட்ஸ்மேன் மட்டையில் பட்டு ஓடத் துவங்கியதும் ஓட வேண்டும். இன்னும் சொல்லப்போனால் விராட் துரத்துவதை விட வேகமாக பந்தை இந்த கேமரா துரத்த வேண்டும்,
மிட் விக்கெட் கேமரா பந்துவீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேன்களை மைதானத்தின் பக்கவாட்டு திசையில் தொடர்வது, ஹை45 கேமரா மூலம் பிட்சிலிருந்து 45 டிகிரி கோணத்தில் ஆட்டத்தை கவர் செய்யும் இந்த கேமரா இதன் மூலம் பேர்ட் ஐ வியூவை பெற முடியும்.
மூவிங் கேமராமேன் என்பவர் மைதானத்தில் முழுவதும் சுற்றி வருபவர். மைதானத்தில் உள்ள ரசிகர்களின் உற்சாகம், வீரர்கள் எக்ஸ்ப்ரஷன் என கலர்ஃபுல்லான விஷயங்களை கேட்ச் செய்வதுதான் இந்த கேமராவின் வேலை. அடுத்தது சூப்பர் ஸ்லோ கேமரா இந்த கேமரா மூலம் பேட்ஸ்மேன் பந்து வீச்சாளர்களின் க்ளோசப் வியூக்களை பெற முடியும், பந்து தரையில் படுவது, பவுண்ஸ் ஆவது, அது பீல்டரின் கைக்கு செல்வது என மிகவும் க்ளோசான ஷாட்களை வழங்கும். இந்த கேமரா தான் மிக முக்கியமாக பந்தின் நகர்வை ஸ்லோமோஷனில் காட்டும், நொடிக்கு 100 ப்ரேம்ஸ் நகர்வைக் காட்டும்.

இந்த கேமரா ஒரு பந்தை மிஸ் செய்தால் அதனை நாம் லைவ்வில் காண முடியாது. காரணம் இந்த கேமரா தான் க்ளோஸ் வியூவை தரும். தோனியின் அதிவேக ஸ்டெம்பிங்குகளைகூட ஸ்லோமோஷனில் ப்ளே செய்ய இந்த கேமரா தான் உதவும்.
ஒரு லைவ் மேட்ச் நமக்கு கூலாக தெரிய இவ்வளவு பேரின் வேலை தேவைப்படுகிறது. இந்த ஒவ்வோருவருமே அனைத்து பந்துகளையும் தொடர வேண்டும். இது மைதானத்தில் ஆடும் வீரர்களின் வேலையை விட கடினமானது என்கின்றனர் ஃபீல்ட் கேமரா மேன்கள்.

ஒரு நாள் போட்டிக்கு 600 பந்துகளை தொடர்ந்தால் போதும். டெஸ்ட் போட்டியை நினைத்துப் பாருங்கள் 2700 பந்துகளை பின் தொடர வேண்டும். இனிமே மேட்ச் பாக்கும்போதெல்லாம் இது மிட் விக்கெட் கேமரால எடுத்ததோ...இது பேர்ட் ஐ வியூ தானே அப்படினு பேச ஆரம்பிச்சுடணும் போல...
டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல்லாம் எப்படி அடிக்குறாங்கணு அவுங்களுக்கே தெரியாது.எப்படிதான் ஃபாலோ பண்ணுறாங்களோ? உண்மையாலுமே நீங்க கெத்து தான் பாஸ்!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.