முதலில் சிரித்த மோடி இப்போது கண்ணீர் விடுகிறார் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் மோடி நேற்று கோவா மாநிலம் பனாஜியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் சந்தித்து வரும் பிரச்னைகளை உணர்ச்சி பொங்க பேசினார். வரும் டிசம்பர் 30ம் தேதி வரை பொதுமக்கள் தன்னோடு ஒத்துழைத்தால் அவர்கள் விரும்பிய இந்தியாவை தருவேன் என உருக்கமாக பேசினார். மேலும் எனக்கு எதிராக சிலர் ஒன்று திரண்டுள்ளனர். அவர்கள் என்னை வாழ விடமாட்டார்கள் என்பதை அறிவேன் எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, இப்போது மோடியின் உண்மையான முகம் வெளிப்பட்டு விட்டதாக தெரிவித்தார். ஜப்பானில் சிரித்த மோடி இப்போது கண்ணீர் விடுகிறார். மோடி சிரிக்கிறார், ஏழைகள் அழுகின்றனர். இதன் மூலம் அவரது நிஜஉருவம் வெளியாகியுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.