Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 8, 2016

வடிவேலு பாணியில் எஸ்.ஐ.யிடம் வித்தைகாட்டிய மாணவர்கள்..! இது கதை அல்ல நிஜம்


சென்னையில் தில்லாலங்கடி பட வடிவேல் பாணியில் பைக்கை ஓட்டி போலீஸ் எஸ்.ஐ.யின் காலை இரண்டு கல்லூரி மாணவர்கள் உடைத்தனர். மூன்று பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தில்லாலங்கடி படத்தில் வடிவேல், பிரேக் பிடிக்காத பைக்கில் சென்று போலீஸாக நடித்த மன்சூர் அலிகான் மீது மோதுவார். அதுபோல சென்னை கடற்கரையில் இன்று பைக்கில் வந்த இரண்டு மாணவர்கள், சப்-இன்ஸ்பெக்டர் மீது மோதினர். சென்னை அரும்பாக்கம், வைஷ்ணவா கல்லூரியில் படித்து வருபவர் புவன்குப்தா. மோகித். இவர்கள் இருவரும் சூளைமேடு மற்றும் கெல்லீஸில் தங்கியுள்ளனர். இன்று காலை பெசன்ட்நகர் கடற்கரையில் புகைப்படங்களை எடுத்த மாணவர்கள் அங்கிருந்து பைக்கில் ஹெல்மேட் அணியாமல் வந்தனர். கலங்கரை விளக்கம் அருகே வந்தபோது அங்கு நின்ற போக்குவரத்து போலீஸார் ஹெல்மெட் போடாததற்காக பைக்கை வழிமறித்தனர். போலீஸாரிடமிருந்து தப்பிக்க மாணவர்கள் இருவரும், கடற்கரை சர்வீஸ் சாலையில் செல்ல  பைக்கை திருப்பினர். உடனடியாக போலீஸார், அவர்களை விரட்ட முயன்றனர். இதனால் பயந்த மாணவர்கள் பைக்கை வேகமாக ஓட்டினர். அப்போது கட்டுபாட்டை இழந்த பைக், அங்கு நின்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெஸ்லிதாஸ் மீது மோதியது.

தில்லாலங்கடி படத்தில் பிரேக் பிடிக்காத பைக்கில் வடிவேல் சென்று போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்சூர்அலிகான் மீது மோதியதைப் போல பணியில் ஈடுபட்ட எஸ்.ஐ மீது இரண்டு மாணவர்களும் பைக்குடன் மோதினர். இதில் எஸ்.ஐ.யின்  காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அடுத்து நிலைதடுமாறி கீழே விழுந்த இரண்டு மாணவர்களும் படுகாயமடைந்து மயங்கினர். இதையடுத்து மூன்று பேரையும் மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன், பொதுமக்களை கலைந்து செல்லும்படி கூறினார். இதில் பொது மக்களுக்கும் அவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பொதுமக்கள், இன்ஸ்பெக்டர் பாண்டியனை அடித்து உதைத்தனர். இதைப்பார்த்த சக போலீஸார், பொது மக்களிடமிருந்து அவரை காப்பாற்றினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்து தொடர்பாக அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.