Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 8, 2016

படப்படிப்பில் ஸ்டண்ட் நடிகர்கள் மரணம். அதிர்ச்சியில் கன்னட படவுலகம்!


கன்னட நடிகர் துனியா விஜய் நடித்த மஸ்திகுடி என்கிற படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் இன்று நடைபெற்றது. பெங்களுரில் இருந்து 35 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அணைக்கட்டு ஒன்றில் நடைபெற்ற படப்பிடிப்பில், 30 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் ஹெலிகாப்டரில் இருந்து ஹீரோவுடன் இரண்டு ஸ்டண்ட் நடிகர்களும் குதிப்பது போல காட்சி படமாக்கப்பட்டது.

துனியா விஜய்யுடன், அனில் மற்றும் உதய் ஆகிய இரண்டு ஸ்டண்ட் நடிகர்கள் நடித்தார்கள்.  அப்படி குதித்ததில், நீரில் மூழ்கி அனில், உதய் இருவரும் துரதிருஷ்டவசமாக இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. கிட்டத்தட்ட பல மணிநேரங்களாக இருவரின் உடல்களையும் தேடும் முயற்சி நடைபெற்று வருவதாக பெங்களூரு காவல்துறை அறிவித்திருகிறது. நாயகன் துனியா விஜய் லைஃப் ஜாக்கெட் அணிந்திருந்ததால், உடனடியாக படகு சென்று அவரை மீட்டு வந்தது. மற்ற இருவருக்கும் லைஃப் ஜாக்கெட் வழங்கப்படவில்லை.

பெங்களூரு போலீஸார் படப்பிடிப்புக் குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.