Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 24, 2016

வரலாறு காணாத சரிவில் ரூபாய் மதிப்பு


அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 27 பைசா குறைந்து, 68.83 ரூபாயாக உள்ளது. கடந்த 9 மாதங்களில் இல்லாத ரூபாய் மதிப்பு வீழ்ச்சி இது. தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து இந்திய ரூபாயின் மதிப்பு 2.92 சதவீதம் சரிந்துள்ளது.

தொடர்ச்சியாக வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறுவது, அமெரிக்க ஃபெடரல் வங்கியில் வட்டி விகிதங்கள் அதிகரித்தது மற்றும் மத்திய அரசின் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு போன்ற காரணங்களால் இந்த வரலாறு காணாத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.