Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 15, 2016

புதிய ரூபாய் நோட்டு பற்றிய வதந்திகளும்... மத்திய அரசின் விளக்கமும்....


கடந்த 8 ஆம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தவுடன் பல்வேறு வதந்திகள் பரவின. பின்னர் அரசு சார்பில் அதற்கான விளக்கங்கள் கொடுக்கப்பட்டன அது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

புதிதாக வந்துள்ள 2000 ரூபாய் நோட்டுகளில் எலக்ரானிக் சிப் இருப்பதாக தகவல் வெளியானது. இதன்மூலம் 120 மீட்டர் ஆழத்திற்கு நோட்டுகளை பதுக்கி வைத்தாலும் ஜிபிஎஸ் மூலம் அதை கண்டறிந்து விடலாம் என தகவல் பரவியது. பின்னர் இது போன்ற சிப் ஏதுமில்லை என ஆர்பிஐ விளக்கம் அளித்தது. இது வதந்தி என்று தெரியாமல் பாரதிய ஜனதாவை சேர்ந்த எஸ் வி சேகர் , ஜிபிஎஸ் சிப் புதிய நோட்டுகளில் இருக்கிறது என்றும் இதன் நன்மைகள் என்ன என்று அவரே வீடியோ வெளியிட, பின்னர் நிதியமைச்சர் அருண் ஜெட்லியே வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.

புதிய 2000 ருபாய் நோட்டுகள் நீரில் பட்டால் சாயம் போவதாக தகவல் வெளியானது. பின்னர் இதுவும் வதந்தி என தெரிய வந்தது. புதிய 10 ரூபாய், 20, 50, 100 ரூபாய் நோட்டுகள் வந்துள்ளதாகவும் அதில் ராஜீவ் காந்தி, சுபாஷ் சந்திர போஸ் ஆகிய படங்களுடன் இந்த வகையிலான நோட்டுகள் வெளிவந்ததாகவும் தகவல் பரவியது. பின்னர் இதுவும் வதந்தி என தெரிந்தது. புதிதாக அச்சிடப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளை பதுக்கிவிட்டதால் தான் அது மக்களுக்கு கிடைக்கவில்லை என்றனர் பின்னர் அது வெளியிடப்பட்டதால் அதுவும் வதந்தி என்று தெரியவந்தது. புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளில் பேனாக்களில் எழுதினால் அது செல்லாமல் போகிவிடும் என்றும் அந்த உத்தரவில் தமிழக அரசு முத்திரையுடன் வெளிவந்தது. இதுவும் வதந்தி என தெரிய வந்தது. இரண்டரை லட்சம் ரூபாய்க்கு மேல் வங்கிகளில் டெபாசிட் செய்வர்களுக்கு 200% அபாரத வரி என்றவுடன் ஒருவர் 3 லட்ச ரூபாய் கூடுதலாக செலுத்தினால் 6 லட்ச ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்றும் வதந்தி கிளம்பியது. 200 சதவிகித அபராதம் என்று சொன்னதால் டெபாசிட் செய்யும் பணத்துடன் கூடுதலாக வரிப் பணம் செலுத்த வேண்டும் என்பதால் பலர் பணத்தை குப்பை தொட்டியில் போட்டனர். ஆனால் அதுவும் வதந்தி என்றும், பழைய நோட்டுகள் செல்லாமல் போனதால் உப்பு விலை கடுமையாக உயர்ந்தது. பின்னர் அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்தது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.