முதல்வரின் தேதி கிடைக்காததால் திறக்கப்படாமல் இருந்த பாலத்தை பொதுமக்களே திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர... அதிர்ச்சியடைந்த அ.தி.மு.க.வினர் பாலத்தை இரவோடு இரவாக மூடி, காலையில் மறு திறப்பு செய்தனர். தங்களின் அதிரடி முடிவால் பாலம் திறக்கப்பட்டதால் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கரூர் நகருக்கு கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் இருப்பவர்கள் கரூருக்கு வருவதானால், அகலமாகக் கிடக்கும் அமராவதி ஆற்றை கடந்துதான் வரவேண்டும். இதனால்,தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பசுவதிபாளையம் பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு ரூ.13.75 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணி துவங்கியது. 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த இந்த பாலப்பணி, ஒருவழியாக மூன்று மாதங்களுக்கு முன்பு முடிவடைந்தது.
முதல்வர் தேதி கிடைக்காததால் பாலத்தை திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பாலம் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாமல் மக்கள் குழம்பினர். பாலத்தை உடனடியாக திறக்க மக்கள் கோரிக்கை விடுத்தபோதும், முதல்வர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், 'பாலத்தை திறப்பதா?,வேண்டாமா?' என்ற குழப்பத்திலேயே பால திறப்பை கிடப்பில் போட்டிருந்தது.

பாலம் கட்டும் பணியால் 3 ஆண்டுகளாக அல்லற்பட்டு வந்த மக்கள், பாலம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் பல கி.மீ. தூரம் சுற்றி செல்லும் நிலை தொடர்ந்ததால் அதிருப்தியடைந்தனர். ஆனால் பாலம் திறக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. இடையில் அரவக்குறிச்சி தேர்தலும் அறிவிக்கப்பட்டதால் பால திறப்பு கிடப்பில் போடப்பட்டது.
இதனால் அதிருப்தியடைந்த மக்கள் பாலத்தின் பாதைகளை அடைத்து வைக்கப்பட்டிருந்த கட்டைகளை உடைத்து பாலத்தை பயன்படுத்தத் தொடங்கினர். இதனால் அ.தி.மு.க.வினர் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து இரவோடு இரவாக பாலத்தை மீண்டும் கட்டைப்போட்டு மூடிய அ.தி.மு.க.வினர், மறுநாள் பெயரளவுக்கு ஒரு திறப்பு விழாவை நடத்தி பாலத்தை திறந்து விட்டனர்.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அந்த பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பழனிவேல், "நாங்க பாலத்தை திறந்த அன்னைக்கு நைட்டே ஆளுங்கட்சிகாரங்களோட கும்பலா வந்தாங்க. அப்போ அ.தி.மு.க கரூர் நகரச் செயலாளர் நெடுஞ்செழியன், 'யார் பாலத்தை திறந்தது. உங்களுக்கு யாரு அந்த அதிகாரத்தை கொடுத்தது?. நீங்களே பாலத்தை திறந்துகிட்டா, நான், அமைச்சரெல்லாம் எதுக்கு இருக்கோம். உங்களை எல்லாம் உள்ளே தூக்கி வைக்கனும்'ன்னு எங்களை மிரட்டினார். பிறகு அவங்களே, மறுபடியும் பாலத்தின் இருபுறமும் கட்டையை கட்டி போக்குவரத்தை தடை பண்ணிட்டுபோயிட்டாங்க. 'என்னடா சோதனை'ன்னு எங்களுக்கு வெறுப்பா போச்சு. மறுநாள் காலையில் வந்தவங்க, அவங்க கையால பாலத்தை திறந்து, தாங்களே திறந்ததா காட்டிகிட்டு போயிட்டாங்க. எப்படியோ எங்களுக்கு பாலத்தை திறந்து விட்டுட்டாங்க. அதுவரைக்கு சந்தோஷம்" என்றார்.
இது தொடர்பாக அ.தி.மு.க. கரூர் நகரச் செயலாளர் நெடுஞ்செழியனிடன் கருத்து கேட்க முற்பட்டோம். பல முறை தொடர்பு கொண்டும் போனை எடுக்கவில்லை.
எது எப்படியோ தங்களது அதிரடி முடிவால் பாலம் திறக்கப்பட்டதால் மகிழ்ச்சியில் உள்ளனர் கரூர் மக்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.