பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை வங்கியில் எடுக்க வருபவர்களுக்கு இனி கையில் அடையாள மை வைக்கப்படும் என்று பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், 'வங்கிகளில் நீண்ட வரிசையில் மக்கள் நிற்பதற்கு காரணம், ஒரே நபர் மீண்டும் மீண்டும் பணம் எடுக்க வருவதால் தான். இந்த பிரச்னையை சமாளிக்க, தேர்தலில் பயன்படுத்துவது போன்று, வங்கியில் பணம் எடுக்க வருவோருக்கு கையில் அடையாள மை வைக்கப்படும். இன்று முதல் பெரு நகரங்களில் இது நடைமுறைக்கு வரும். கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் பல்வேறு நபர்கள் மூலம் பணத்தை மாற்ற முயற்சி செய்கின்றனர். அரசிடம் போதுமான பணம் இருப்பதால், மக்கள் பதற்றம் அடைய வேண்டாம். ' என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.