Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 28, 2016

பிரதமர் வந்தே ஆக வேண்டும்..! நாடாளுமன்றத்தை முடக்கியது எதிர்க்கட்சிகள்


பழைய 500 மற்றும் 1000 ரூபாய் பணம் செல்லாது என அறிவித்த மத்திய அரசின் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

மேலும், இது தொடர்பாக விவாதிப்பதற்காக மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி, கலந்துகொள்ள வேண்டும் என்றும் எதிர்க் கட்சியினரும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மாநிலங்களவை மீண்டும் கூடியது. அப்போதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவை நடவடிக்கை பிற்பகல் 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

முக்கியமாக மத்திய அரசின் ரூபாய் நோட்டு விவகாரத்தால், கடந்த வாரம் முதல் நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.