அன்புள்ள தோழி தேன்மொழிக்கு,
வணக்கம். முதலில் நல்வாழ்த்துகள். இரண்டாம் குழந்தையை எதிர்பார்க்கின்றீர்கள் என்ற செய்தி மிக மகிழ்வளிக்கின்றது. கணவரோடு இனிய கனவுகளுடன் காத்திருக்கிறீர்கள். உங்கள் இருவரை விடவும் உங்கள் குழந்தை சாதனா இன்னும் மகிழ்வாக இருப்பாள் என நம்புகிறேன். தனக்கு ஒரு தம்பியோ தங்கையோ வரவிருக்கிறாள் என, சாதனா ஆவலோடு இருப்பாள். அது ஒரு மகிழ்வான காத்திருப்பு. மற்ற காத்திருப்பைவிட அது ஒரு கவிதை போன்றது.
முதல் குழந்தையின் வருகையின்போது உங்கள் மொத்த கவனமும் கருவில் வளரும் குழந்தைமீது குவிந்திருந்து இருக்கும். இப்போது சாதனாவின் மீதும் கருவில் வளரும் குழந்தை மீதும் சரிசமமாக இருக்கும். இரண்டாம் குழந்தையை கொண்டாட, நீங்கள் தயாராவதற்கு முன்னர் சாதனாவைத் தயார் செய்வதே மிக முக்கியம். சாதனாவின் நான்காம் வயதான பிறகு இரண்டாம் குழந்தை என்ற உங்களின் முடிவு மிகச் சரியானதே, சாதனா இதைவிட குறைந்த வயதில் இருந்தால் தன் தம்பியை/தங்கையை ஏற்றுக்கொள்வதில் சிரமப்படுவாள். நான்கு வருட இடைவெளி சரியானதுதான்.

முதலில் சாதனாவை, தம்பி அல்லது தங்கை யார் வந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனப்பக்குவத்தைத் தரும் உரையாடலைத் தொடங்க வேண்டும். இரண்டாம் குழந்தைக்கு ஒரு செல்லப்பெயரை நீங்க மூவரும் சேர்ந்து வைக்கத் திட்டமிடுங்கள். சாதனா சொல்லும் பெயரே வைத்தல் அவளை மகிழ்வூட்டும். எங்களின் முதல் குழந்தை குழலி அப்படித்தான் 'பூபு மிக்கி' என்ற பெயரைச் சூட்டினாள். வீட்டில் பூபுவிற்கான இடம், பூபுவிற்கான விளையாட்டுப்பொருட்கள், பூபுவிற்கான போர்வை, பூபுவிற்கான புத்தகம் என எங்கு சென்றாலும் தன் தம்பி/தங்கைக்கு என்ன தேவைப்படும் என்றே சிந்தனை இருந்தது.

முதல் குழந்தையின்போது “பாப்பா, இது உனக்கான சாப்பாடு என ஒரு வாய்” எனச்சொல்லி உள்ளே இருக்கும் குழந்தையுடன் பேசி இருப்பீர்கள். உங்கள் கணவர் இரவுகளில் குழந்தைக்கு பாடலும் புத்தகமும் படித்துக் காட்டியிருப்பார். அதேபோல, சாதனாவையும் தினமும் கருவிலிருக்கும் அவளுடைய உடன்பிறப்புடன் பேச வைக்கவும், ஒரு வாய் சாப்பாட்டினை உங்களுக்கு ஊட்டி “இது பாப்பாவுக்கு” எனச் சொல்ல வைக்கவும். இதன்மூலம், தன் உடன்பிறப்பின் வளர்ச்சியில் அவளுக்கு பங்கு இருக்கு என மகிழ்வாள். மருத்துவரிடம் செல்லும்போது அழைத்துச்செல்லுங்கள், மாத்திரை சாப்பிட அவளை நினைவூட்டச்சொல்லுங்கள், தினமும் காலை எழுந்ததும் சில நிமிடங்கள் வயிற்றில் இருக்கும் உடன்பிறப்புடன் பேசச்சொல்லுங்கள்.
உடன்பிறப்புகள் இருவரிடமும் ஆரம்பம் முதலே ஓர் இணக்கம் அவசியம். சில சமயம் ஆரம்பத்தில் ஏற்படும் விரிசல், எரிச்சல் பல காலம் நீடிக்கக்கூடும். தன்னுடைய பொருட்களில், தன்னுடைய அப்பா அம்மாவின் அன்பில் பங்குபோட இன்னும் ஒருவர் வந்துவிட்டார் என்ற எண்ணம் வந்திடக்கூடாது. வரப்போகும் குழந்தையும் தன்னுடைய உடன்பிறப்புக்கு அவள்தான் எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்யவேண்டும் என்பதனைப் பேசிப்பேசி உணர வைக்க வேண்டும்.
குழலி (என் மகள்) அவளுடைய அம்மாவின் வயிறு பெரிதாக பெரிதாக அதற்கான காரணத்தினை இப்படிக்கூறினாள் “உள்ளேருந்து பாப்பா உதச்சி உதச்சி அம்மா வயிறு பெருசாகுது இல்ல”
அதேபோல பிறந்த குழந்தையைப் பார்க்க நிறைய நண்பர்கள், உறவினர்கள் வருவார்கள். அவர்கள் எல்லோரிடமும் ஒரு கோரிக்கை வையுங்கள். பிறந்த குழந்தைக்கு பரிசு பொருள் வாங்கி வரும்போது சாதனாவிற்கு ஒரு பரிசு வாங்கி வரும்படி சொல்லுங்கள், வாங்கி வந்த பரிசினையும் சாதனாவிடமே கொடுக்கச்சொல்லுங்கள். உங்களை வாழ்த்த வருபவர்கள் சாதனாவையும் வாழ்த்தச்சொல்லுங்கள். “ஹே, தம்பி பொறந்துட்டானா. ஜாலிதான்” என அவளை வாழ்த்தினாள் அவளின் மகிழ்ச்சிக்கு எல்லையே கிடையாது. பிறந்த குழந்தை அழுதால் ஏன் அழுகிறது என்பதை சாதனாவுக்கும் சொல்லி, அழுகையைக் கட்டுப் படுத்தச் செய்யுங்கள்.

என்னுடைய இரண்டாவது குழந்தை (செழியன்) ஒரு விடியற்காலையில் பிறந்தான். தன் உடன்பிறப்பின் வருகைக்காக அத்தனை ஆவலுடன் இருந்தாள் குழலி. கண்விழிக்கும்போது அவன் கொண்டுவரப்பட்டான். அவள் கண்களில் அத்தனை பரவசம் “அப்பா, இவனை நாளைக்கே எங்க ஸ்கூல்ல ப்ரீகேஜி சேத்திடலாமா?” என்றாள்.
ஒவ்வொரு கணத்தையும் மூவரும் கொண்டாடுங்கள். சாதனாவிற்கு என் ப்ரியங்களும் முத்தங்களும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.