Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 2, 2016

புகார் அளிக்க வந்த பெண்ணின் கணவனை அபகரித்துக்கொண்ட பெண் போலீஸ்


காவல்நிலையத்தில் புகார் அளித்த பெண்ணின் கணவரை‌ அந்த காவல்‌நிலையத்தில் வே‌லை செய்த‌ பெண் காவலரே ‌இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரியலூரில் நடைபெற்றுள்ளது.

அரியலூர் மாவட்டம் தெற்கு பரணத்தை சோந்தவர் செல்வக்குமார். இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வருகின்றார். இவரது மனைவி லதா. கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக மனைவி லதாவிற்கு சில மாதங்களாக செல்வக்குமார் பணம் அனுப்புவதில்லை என கூறப்படுகின்றது.

இதனையடுத்து லதா, இரும்புலிக்குறிச்சி காவல் நிலையத்தில் செல்வக்குமாரை சமாதானப்படுத்த ‌நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் செய்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த பெண் காவலர் ராதிகா, தான் சமாதானம் பேசுவதாகக் கூறி, லதாவிடமிருந்து செல்வக்குமாரின் போன் நம்பரை வாங்கி உள்ளார்.

இதுகுறித்து பெண் காவலர் ராதிகா, தொடர்ந்து செல்வக்குமாருடன் பேசியதில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது நட்பாக மாறியது. கடந்த, சில தினங்களுக்கு முன் சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊருக்கு வந்த செல்வக்குமார், ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இது செல்வக்குமாரின் மனைவி லதாவிற்கு தெரியவந்ததையடுத்து ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வக்குமாரை கைது செய்தனர். தலைமறைவாகி விட்ட பெண் காவலர் ராதிகாவை போலீசார் தேடி வருகின்றனர். ராதிகாவிற்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

காவல்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட பெண்காவலர் ராதிகாவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அனில்குமார் கிரி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.