Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 3, 2016

வாட்ஸ் அப்பால் மீட்கப்பட்ட கொப்பம்பட்டி பாட்டி


திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அடுத்த கொப்பம்பட்டியைச் சேர்ந்த தைலம்மை என்பவரின் வயது 70. இவர் கடந்த 30-ஆம் தேதியன்று கொப்பம்பட்டியில் இருந்து சிதம்பரத்தில் உள்ள தனது பேத்தியைப் பார்ப்பதற்காக சென்றவர் வழிதவறி எங்கு சென்றார் என்று தெரியவில்லை.அவரது உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் நான்கு நாட்களாக தேடியும் காணவில்லை. இதையடுத்து இவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் தகவல் கொடுங்கள் என வாட்ஸ் அப்பில் தகவல் வெளியானது.

இதைப் பலரும் பார்வர்ட் செய்தார்கள். இந்நிலையில் கடந்த 4 நாட்களாக சுயநினைவின்றி சிதம்பரம் மெடிக்கல் காலேஜ் வளாகத்தில் படுத்திருந்தவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.