Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 7, 2016

காந்தி படம் இல்லாமல் வெளியாகும் 2000 ரூபாய் நோட்டு..?


10, 20, 50, 100, 500, 1000 என அனைத்து ரூபாய் நோட்டுகளிலும் தலைவர் காந்தியின் உருவப்படம் காலங்காலமாக அச்சிடப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது வெளியிடப்பட உள்ள 2000 ரூபாய் நோட்டுகளில் காந்தி படம் இல்லாமல் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2000 ரூபாய் நோட்டுகளை அடுத்த வருடம் முதல் வெளியிட உள்ளதாக ரிசர்வ் வங்கி கடந்த மாதம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், காந்தி படம் இல்லாமல் 2000 ரூபாய் நோட்டுகள் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி, மைசூர் கரன்சி அச்சகத்தில் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு தயாராக இருப்பதாகவும், விரைவில் இவை வெளியிடப்படும் என கூறப்படும் நிலையில், தற்போது அச்சடிக்கப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படம் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் 2,000 ரூபாய் நோட்டுகள் கைப்புழக்கத்திற்கு வரும் போது தான் அதில் காந்தியின் படம் இருக்கிறதா அல்லது இல்லையா என்ற உண்மை நிலை தெரிய வரும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.