Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 26, 2016

பண மதிப்பு நீக்கமும் விளைவும்: மோடியின் 10 அம்ச விளக்கம்


பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்தும், அதன் விளைவுகள் பற்றியும் பிரதமர் நரேந்திர மோடி சில முக்கிய கருத்துகளை முன்வைத்துள்ளார்.

ரூபாய் நோட்டு விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்து பேச வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தீவிரமாக குரலெழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், டெல்லியில் புத்தக வெளியீட்டு விழாவிலும், பஞ்சாப் - பதிண்டாவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் பிரதமர் மோடி இன்று (வெள்ளிக்கிழமை) கலந்துகொண்டு பேசினர். இந்த நிகழ்ச்சிகளில், பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கான காரணிகளை விளக்கும் வகையில் அவர் பேசிய 10 முக்கிய கருத்துகள்:

* பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு வெகு சிலரே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். போதிய கால அவகாசம் கொடுக்கவில்லை என்பதே அவர்களது கவலை. தங்கள் பணத்தை மாற்றிக் கொள்ள, ஒருவேளை குறைந்தபட்சம் 76 மணி நேரமாவது கால அவகாசம் கொடுத்திருந்தால், இந்நேரம் அவர்கள் சரமாரியாக புகழ்ந்திருப்பார்கள்.

* ஊழல், கறுப்புப் பணத்துக்கு எதிராக தேசம் நடத்தும் இப்போரில் நாட்டின் சாமானிய மக்கள்தான் படை வீரர்கள்.

* கடந்த 70 ஆண்டுகளாக நாட்டில் சட்டதிட்டங்கள் பல்வேறு விதமாக தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால், நாடு ஊழல் நடவடிக்கைகளுக்குள் சிக்கிக் கொண்டது.

* ஊழல் தொடர்பாக சர்வதேச அளவில் எடுக்கப்பட்ட பற்பல ஆய்வறிக்கைகளிலும் இந்தியா மோசமான இடத்தில் பளிச்சிட்டது. ஊழல் மிகு நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னிலையில் இருந்தால் நாம் எப்படி பெருமை கொள்ளமுடியும். இப்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையால் இனி இந்தியா தலைநிமிர்ந்து நிற்கும்.

* அவரவர் பணத்தை பயன்படுத்த அவரவருக்கு உரிமை இருக்கிறது. சொந்தப் பணத்தைப் பயன்படுத்த யாரையும் தடுக்கவில்லை.

* எப்போதும் பணத்தை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. டிஜிட்டல் தொழில்நுட்பம் மேம்பட்டு வரும் சூழலில் நாமும் அதற்கேற்ப மாறிக்கொள்ளலாம். மொபைல் வழியாக ஷாப்பிங் செய்வது வாட்ஸ் அப்பில் குறுந்தகவல் அனுப்புவது போல் எளிதானது.

* பணப் பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை நிலைநாட்ட வேண்டுமெனில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். வெகு குறுகிய காலத்தில் நாடு முழுவதும் 500 நகரங்களில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை சாத்தியப்படுத்த முடியும்.

* பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின்னர் நாடு முழுவதும் முனிசிபல் கார்ப்பரேஷன்களில் ரூ.13,000 கோடி வரை வரிப் பணம் வசூலாகியுள்ளது. நவம்பர் 8-ம் தேதிக்கு முன்னர் வெறும் ரூ.3000 கோடி மட்டுமே வசூலித்த சில மாநகராட்சிகளில் தற்போது ரூ.13,000 கோடி வசூலிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பணம் சாலை சீரமைப்பு, மின் விநியோக மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படும்.

* கடுமையான சிரமத்துக்கு மத்தியில் மக்கள் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மக்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். ஊழல், கறுப்புப் பணத்தால் ஏழை, நடுத்தர மக்கள் சுரண்டப்படுகின்றனர். இதை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* ஊழலும், கறுப்புப் பணமும் நாட்டை அரிக்கும் கரையான். ஊழலை ஒழிப்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. ஊழல், கறுப்புப் பணம், கள்ளப் பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு மக்கள் அளிக்கும் பேராதரவுக்கு நன்றி.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.