மேடைப் பேச்சை கேட்க, கண் விழித்து காத்திருந்த தலைமுறை இப்போது ஓய்ந்து விட்டது. அரசியல் மேடைகள் மீதான கவர்ச்சி இப்போது மிகவும் குறைந்து விட்டது. தலைவர்களுக்காக காத்திருக்கும் பொறுமையையும் நாம் இழந்து விட்டோம். ஆனால் விடிய விடிய காத்திருந்து தங்களது பேச்சை கேட்க வைத்த, காந்தப் பேச்சாளர்கள் இங்கு இருந்தார்கள். இருக்கிறார்கள். 'பேசிப்பேசியே ஆட்சியைப் பிடித்தார்கள் என தி.மு.க.வைப் பற்றி சொல்லும் அளவுக்கு தி.மு.க.வுக்கு மிகப்பெரிய பலமாக இருந்தவர்கள் பேச்சாளர்கள். அவர்களில் முக்கியமானவர் தீப்பொறி ஆறுமுகம்.
கவர்ந்திழுத்த பெரியாரும் அண்ணாவும்...
மதுரையைச் சேர்ந்த 'தீப்பொறி' ஆறுமுகம், 8ம் வகுப்பை தாண்டி படித்து விடவில்லை. வறுமை விரட்ட.. படிப்பை பாதியில் நிறுத்திய ஆறுமுகத்துக்கு பேச்சின் மீது அபார ஆர்வம். பள்ளிப்படிப்பின் போதே பேச்சுப்போட்டியில் பங்கேற்று பரிசுகளை வென்றிருந்த அவரை, பேச்சின் மீதான ஆர்வம் அரசியல் மேடை நோக்கி ஈர்த்தது. மதுரையில் தெருமுனைகளில் நடக்கும் எந்த அரசியல் கூட்டமாக இருந்தாலும் அதை தவற விடமாட்டார் தீப்பொறி ஆறுமுகம். அடுக்கு மொழி, அணியிலக்கணம் என அத்தனை அலங்காரத்துடனான அண்ணாவின் பேச்சும், அலங்கார நடைகள் துறந்த பெரியாரின் நீண்ட சொல்வீச்சும் ஆறுமுகத்தை ஒரு சேர ஈர்த்தனர். மெல்ல அரசியல் மீது ஆர்வம் ஏற்பட்டு திராவிடர் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார் .
தீப்பொறி என பட்டம் கொடுத்த அண்ணா
பின்னர் தி.மு.க. கூட்டங்களில் பேசத்துவங்கினார். தனது ஆளுமையான பேச்சால் உடனே உயரத்துக்கும் வந்தார். அண்ணா பங்கேற்கும் மேடைகளில் அவருக்கு முன்னதாக பேச அனுமதியளிக்கும் வகையில், தனது காந்தப் பேச்சால் அனைவரையும் கவர்ந்தார் ஆறுமுகம். 1967ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது , விழுப்புரம் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் அண்ணா பங்கேற்க வேண்டும். ஆனால் அவர் வருவதற்கு தாமதமானது. அண்ணாவுக்காக காத்திருந்த மக்களை, 2 மணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாமல் தொடர்ந்த தனது பேச்சால் எதையும் யோசிக்க விடாமல் கட்டிப்போட்டிருந்தார் ஆறுமுகம்.
நள்ளிரவு 2 மணிக்கு மேடைக்கு வந்தார் அண்ணா. நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் ஆறுமுகத்தின் பேச்சை முடித்துக்கொள்ள சொன்னபோது, அவர் பேசட்டும் எனச்சொல்லி பேச்சை ரசித்தார் அண்ணா. இன்னுமொரு கூட்டத்தில் 'ஆறுமுகத்தின் பேச்சு தீப்பொறியாக பறந்தது' என அண்ணா பாராட்டிச் சொல்ல... அன்று முதல் தீப்பொறி ஆறுமுகமாக மாறிப்போனார். தனது மேடைப்பேச்சால் பெரியாரையும் கவர்ந்து, அவரது பாராட்டையும் பெற்றிருந்தார் தீப்பொறி ஆறுமுகம்.
கல்வீச்சும், தாக்குதலும் சர்வ சாதாரணம் !
தனது பேச்சின் மூலம் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தவர் தீப்பொறி ஆறுமுகம். சாலைகளில், மைதானங்களில் கூட்டம் போட்டு பேச தடை விதிக்கப்பட்டிருந்த மிசா காலம் அது. அப்போது தான் ஸ்டாலினுடன் மிசா சட்டத்தில், கைதாகி 9 மாதங்கள் சிறையில் இருந்து விடுதலை ஆகி இருந்தார் தீப்பொறி ஆறுமுகம். மணப்பாறையில் திரையரங்கு ஒன்றில் உள் அரங்க கூட்டமாக நடந்த கூட்டத்தில் பேசினார் தீப்பொறி ஆறுமுகம். எழுத்துரிமை, பேச்சுரிமையை அடக்க முடியாது என கொந்தளித்தவர், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை கடுமையாக தாக்கிப்பேசினார். சிறையில் இருந்து வெளி வந்த ஒரு சில தினங்களில் மீண்டும் சிறை சென்று மீண்டும் 6 மாத சிறை தண்டனையை அனுபவித்தார்.
தீப்பொறி ஆறுமுகம் பேச்சுக்கு தமிழகத்தின் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. 'தீப்பொறி பேசுனா அவருக்கே தனிக்கூட்டம் கூடுமே' என சொல்லும் தலைவர்களே உண்டு. மிக சீரியஸாகவே தனது பேச்சை துவங்கி அரசியல் விமர்சனத்தை முன்வைத்தார். விமர்சனத்துக்காக மேடையிலேயே கல்வீச்சுகளையும், தாக்குதல்களையும் சந்தித்தவர் தீப்பொறி ஆறுமுகம். 1980களில் தனது பேச்சை இன்னும் சுவாரஸ்யமாக மாற்ற விரும்பினார் தீப்பொறி ஆறுமுகம். நகைச்சுவையாக பேச்சை மாற்றியவர், பின்னாளில் இரட்டை அர்த்தங்களில் பேசவும் செய்தார். பெரிய விமர்சனங்களுக்குள்ளான போதும், இதுவும் மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர், ரஜினி மீதான விமர்சனங்கள்...
இவரது பேச்சை கேட்க கூட்டம் துவங்கும் முன்னரே ஆயிரக்கணக்கானோர் கூடியிருப்பார்கள். பொதுக்கூட்டம் நடக்குமிடத்தில் இருக்கும் கடைகளை முன்கூட்டியே அடைத்து விட்டு பொதுக்கூட்டத்தை கேட்க தயாராக இருப்பார்கள். இரட்டை அர்த்தங்களில் பேசத்துவங்கிய பின்னர் பெண்களின் கூட்டம் கணிசமாக குறைந்தது. சில நேரங்களில் கூட்டத்தில் இருக்கும் பெண்களை இவரே போகச்சொல்வது கூட நடந்திருக்கிறது.
அந்தளவு இவரது பேச்சில் ஆபாசம் இருக்கும். சில விஷயங்களை ஜாடை மாடையாக சொல்லும் தீப்பொறி ஆறுமுகம், 'நான் சொல்றதை சோல்லிட்டேன். புரிஞ்சா புரிஞ்சுக்க. புரியலைன்னா போப்பா. உங்களுக்கு விளக்கம் சொல்லியே நான் ஓய்ஞ்சிருவேன்' போலிருக்கே' என சொல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். ஆனால் பேச்சை கேட்டு முடித்த பின்னால், 'எப்படி பேசுறான் மனுஷன். எல்லோரையும் பின்னி எடுக்கிறானே' எனச்சொல்லும் அளவுக்கு இரட்டை அர்த்த பேச்சுகளை எல்லாம் கடந்து இவரது பேச்சில் கடுமையான அரசியல் விமர்சனங்கள் நிரம்பி இருக்கும்.
கட்சித்தலைமை சொல்வதை மட்டும் பேசுபவராக இவர் இருக்கவில்லை. "எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு, அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த போது, அவரைப் பற்றி இவர் செய்த விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் 'உடல் மண்ணுக்கு... உயிர் தமிழுக்கு...' என ரஜினிகாந்த் பேசியதை குறிப்பிட்டு இவர் பேசியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இருமுறையும் கட்சியில் இருந்து 6 மாதம் இடைக்கால நீக்கம் செய்யப்பட்டிருந்தார் தீப்பொறி ஆறுமுகம். சில நேரங்களில் கட்சியின் தலைவர்கள் பேச முடியாத செய்திகளை, இவர் மூலம் தான் கட்சி பேசச்சொல்லும். அதை மிகவும் காட்டமாகவே பேசுவார் தீப்பொறி ஆறுமுகம்.
கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்சித்தவர்
கடைசி வரை தனது பேச்சால் பொதுமக்களை கட்டிப்போட்டிருந்தார் தீப்பொறி ஆறுமுகம். காரணம் ஒவ்வொரு நாளும் தன்னை அப்டேட் செய்து கொண்டே இருந்தார். எல்லா விவரங்களையும் அறிந்து வைத்திருக்கிறார். இவர் சொல்லும் தகவல்களை புதுப்பித்துக்கொண்டே இருப்பார். படித்தவர்கள், படிக்காதவர்கள் என எல்லோருக்கும் அவரிடம் சொல்ல தகவல் இருந்து கொண்டே இருந்தது. அதனாலே அவரது பேச்சு ரசிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஜெயலலிதாவையும், கருணாநிதியையும் இவர் போல விமர்சித்தவர்கள் யாரும் இல்லை. தி.மு.க.வில் இருந்த் தீப்பொறி ஆறுமுகம், தன் மகனுக்கு வேலை கேட்டு தி.மு.க. தலைவர் கருணாநிதியை நாட.... அதில் ஏற்பட்ட சிக்கலால் தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார் தீப்பொறி ஆறுமுகம். 9 ஆண்டுகள் அ.தி.மு.க.வில் பேச்சாளராக இருந்தார். தி.மு.க.வில் இருந்த போது ஜெயலலிதாவையும், அ.தி.மு.க.வில் இருந்த போது கருணாநிதியையும் கடுமையாக விமர்சித்தவர் தீப்பொறி ஆறுமுகம். அ.தி.மு.க.வில் மேடைப்பேச்சுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்பதால் 2010ல் மீண்டும் அழகிரி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
தனது 15வது வயதில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவுடன் மேடைகளில் பேசத்துவங்கி, பேச்சாளராக வாழ்வைத் துவக்கியவர்,50 ஆண்டுகளுக்கு மேலாக மேலாக பேச்சாளராகவே தொடர்ந்தவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்தார்.

நன்றி வணக்கம் !
'இரட்டை அர்த்தங்களில் பேசுவார். அவரது பேச்சில் அசைவம் அதிகமாக இருக்கும்' என இவர் மீது விமர்சனங்கள் இருந்தாலும், தகவல்கள் இல்லாத, அப்டேட் ஆகாத உரைகளை அவர் ஒரு போதும் தந்ததில்லை. மக்களிடம் சொல்லவந்ததை கொண்டு சேர்த்திருந்தார். ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் தீப்பொறி ஆறுமுகத்தின் உரை வெறும் கதறலாக மட்டும் முடிந்து விடவில்லை. கேட்போர் இதயங்களை அடையும் முழுமையான பேச்சாகவே இருந்திருக்கிறது.
பெரியோர்களோ தாய்மார்களே என சொல்லி 50 ஆண்டுகள் பேசி வந்தவர், தனது பேச்சுக்கு இப்போது நிரந்தரமாக நன்றி வணக்கம் சொல்லி இருக்கிறார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.