Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 3, 2016

தகர்க்கப்பட்டது மவுலிவாக்கம் 11 மாடி அடுக்குமாடி கட்டடம்


சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடி அடுக்குமாடி கட்டடம் வெடி மருந்து மூலம் நேற்று  மாலை 6.52 மணிக்கு தகர்க்கப்பட்டது.

கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி மவுலிவாக்கத்தில் இருந்த இரண்டு 11 மாடி அடுக்குமாடி கட்டத்தில் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் 61 பேர் உயிரிழந்தனர். உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி அருகில் இருந்த மற்றொரு அடுக்குமாடி கட்டத்தை இடிக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி அடுக்குமாடி கட்டடம் நேற்று  இடிக்க முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கட்டடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

இதையடுத்து, தரைதளம், 5வது தளம் உள்ளிட்டவற்றில் உள்ள தூண்களில் துளையிடப்பட்டு வெடிமருந்துகள் வைக்கப்பட்டது. இதற்காக திருப்பூரில் இருந்து மேக்லிங்க் என்ற தனியார் கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கட்டடத்தை இடிப்பதற்கான அனைத்துப் பணிகளையும் அதிகாரிகள் முன்னிலையில் செய்தனர். இடிப்பதற்கான கவுன்ட்டவுன் தொடங்கியவுடன் 5வது தளத்தில் உள்ள வெடிமருந்துகள் வெடித்தன. அடுத்த சில நொடிகளிலேயே முதல்தளத்தில் உள்ள வெடிமருந்துகள் வெடித்தன. ஒரே புகைமண்டலமாக அந்த இடங்கள் காட்சி அளிக்கின்றன.

கட்டடம் இடிக்கும் பணி காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி, சிஎம்டிஏ அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.





இது குறித்து கட்டடம் இடிப்பு பணியில் ஈடுபட்ட நிபுணர்கள் கூறுகையில், "இந்த கட்டடத்தின் வரைபடம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சில நாட்களாக ஆய்வு செய்தோம். எந்த தூண்களின் பிடிமானத்தில் கட்டடத்தை தாங்கும் சக்தியை கண்டறிந்தோம். அடுத்து, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டடத்தை அப்படியே சீட்டுக்கட்டு சரிவது போல இடிக்க ஏற்பாடு செய்தோம். இதனால் அருகில் உள்ள எந்த கட்டடங்களுக்கும் எந்தவித பாதிப்புகள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டோம். கண்மூடி கண்திறக்கும்  நொடிக்குள் 11 மாடி கட்டடமும் இடித்துத் தள்ளப்பட்டது" என்றார்.

3 நொடிகளுக்குள் 11 மாடி அடுக்குமாடி கட்டடமும் இடிக்கப்பட்டது.கட்டடம் தகர்க்கப்பட்டு 30 நிமிடங்கள் ஆகியும், அந்த பகுதி முழுவதும் புகைமண்டலம் சூழப்பட்டு உள்ளது.மின்சாரம்  இன்னும் வராததால் அந்த பகுதி மக்கள் மத்தியில்,அச்சம் நிலவுகிறது.இதற்கு மத்தியில், அந்தப் பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டு இருந்த மக்கள், தங்கள் வீடுகளுக்கு திரும்புகிறார்கள்.அதிகாரிகள், மற்றும் போலீசார் இன்று இரவு முழுவது, அந்தப் பகுதியிலேயே முகாம் இடுவார்கள் என்று வருவாய் அதிகாரிகள் தெரிவித்தனர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.