Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 8, 2016

'எனக்கு ’டிங்கோயிசம்’ பொண்ணுதான் வேணும்!' விநோத திருமண விளம்பரம்


மலையாளச் செய்திதாள்களில் மேனன் பாய், பிரவான் பாய், நாயர் பாய் , நாயர் கேர்ள் ,நம்பூதிபாய் அப்படி இப்படினு திருமண வரன் விளம்பரங்களைப் பார்க்கலாம். கேரளத்தில் மட்டுமல்ல தமிழகத்திலும் அதே நிலைதான். ஜாதிகளை சொல்லவும் கேட்கவும் வெட்கப்படும் காலத்தில்தான் இப்படியும் விளம்பரங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதே கேரளத்தில்தான் ஜாதி வெறியர்களுக்கு புத்தி புகட்டும் வகையில் 'டிங்கோயிசம்' என்ற புதிய மதமும் பிறந்தது.

கேரளத்தைச் சேர்ந்த பகுத்தறிவாளர்கள் சிலர் சேர்ந்து, கடந்த 2008ம் ஆண்டு போலியாக ஒரு மதத்தை ஆரம்பித்தனர். இந்த மதத்தின் பெயர்தான் டிங்கோயிசம். மதத்திற்கு எந்த சித்தாந்தமோ கோட்பாடுகளோ கிடையாது. பால்ய விவாகம் போன்ற சமூகத்தில் நடக்கும் அவலங்களை இந்த டிங்கோயிசம் தட்டிக் கேட்கும்.'ஸ்பைடர் மேன்' போல உடை அணிந்த சூப்பர் ஹீரோ எலியார் டிங்கன்தான் இந்த மதத்தின் கடவுள்.  மஞ்சள் வர்ணத்தில் மேலாடையும் சிவப்பு வர்ண கால்சட்டையும் அணிந்திருப்பார் நம்ம சூப்பர் ஹீரோ. கேரளத்தில் இந்த டிங்கோயிசத்தை கிட்டத்தட்ட 25 ஆயிரம் பேர் பின்பற்றி வருகின்றனர்.



டிங்கோயிசத்தின் கடவுளான கிரேட் டிங்கன் கடந்த 1983ம் ஆண்டு உருவானார். எழுத்தாளர் சோமசேகரன், ஆட்டிஸ்ட் பாபி ஆகியோர் தங்கள் கற்பனைத் திறனில் மிஸ்டர். டிங்கன்  கேரக்டருக்கு உயிர் கொடுத்தனர். கடந்த 2012ம் ஆண்டு பாலமங்களம் புத்தகம் நிறுத்தப்பட்டது. ஆனாலும் டிங்கனுக்கான மவுசு குறையவில்லை. இணையங்களில் சமூக வலைதளங்கள் வழியாக டிங்கோயிசம் வளர்ந்து வந்தது

டிங்கோயிஸ்டுகள், அடிக்கடி பிற மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு சவால் விடுவார்கள். யாராவது அவர்களது கடவுளை அவமதித்து விட்டால் கொதித்து எழுந்து விடுவார்கள். ஒரு முறை மலையாள நடிகர் திலீப் தான் நடித்த படத்திற்கு புரோஃபசர் டிங்கன் என பெயர் வைத்து விட்டார். அவ்வளவுதான் கொதித்து எழுந்த டிங்கோயிஸ்டுகள், 'எங்கள் கடவுளை அவமதித்து விட்டார் திலீப்' எனக் கூறி, 'ரேட் ஆர்மி ' என்ற பெயரில் அவரது  ரெஸ்டாரன்டை முற்றுகையிட்ட கதையும் நடந்திருக்கிறது.

இந்த டிங்கோயிச மதத்தைச் சேர்ந்தவர்தான் பரவூரைச் சேர்ந்த ரேஷ்மின் ஷிவ்சங்கர். முற்போக்கு சிந்தனையாளர். எம்.டெக் படித்துள்ளார். சொந்த தொழில் நடத்தி வருகிறார். தற்போது 29 வயதான ஷிவ்சங்கர் திருமணம் புரிய எண்ணிணார். அதற்காக தன்னைப் போலவே சிந்தனைகள் கொண்ட மணமகளைத் தேடினார். ஆனால், எந்த மேட்ரிமோனி சைட்டிலும் டிங்கோயிசத்தை ஒரு மதமாகவே கருதவில்லை. அதற்கான இடமும் அதில் இல்லை.



இதையடுத்து, கேரள பத்திரிகை ஒன்றில் ஷிவ்சங்கர் திருமணத்திற்காக விளம்பரம் கொடுத்தார். அதில் 'டிங்கோயிஸ்ட் வயது 29, ஹேண்ட்சம் பாய், பாகிஸ்தான் உள்ளிட்ட எந்த நாட்டுப் பெண்ணாகவும் இருக்கலாம்' என விளம்பரப்படுத்தினார். பின்னர் அந்த விளம்பர கட்டிங்கை எடுத்து ஃபேஸ்புக்கிலும் பதிவு செய்தார். 'ஒரு டிங்கோயிஸ்ட் மணமகளை கண்டறிய எனக்கு உதவுங்கள் மணமகள் எந்த நாட்டையும் சேர்ந்தவளாக இருக்கலாம். ஏன் பாகிஸ்தானைச் சேர்ந்தவராக கூட இருக்கலாம்' எனத் தெரிவித்துள்ளார்.  மேலும், இந்திய மேட்ரிமோனி சைட்டுகள் டிங்கோயிசத்தை புறக்கணிப்பது கண்டனத்திற்குரியது என்றும் குறைப்பட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.